search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலச்சரிவு சீரமைப்பில் சிக்கல்"

    • கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பணியாளர்கள் சீரமைப்பை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாண்டிக்குடி-வத்தலக்குண்டு ரோட்டில் பட்டலங்காடு பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது பட்டலங்காடு பிரிவு வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. மீதம் உள்ள 4 கி.மீ. தூரத்திற்கு மக்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூடைகளை வைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் தொடர் மழை பெய்து வருவதால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வில்லை.

    30 ஆயிரம் மணல் மூடைகளை வைத்து அடுக்கினால் மட்டுமே இப்பணி நிறைவடையும். தற்போது வரை 10 ஆயிரம்மணல் மூடைகள் மட்டுமே அடுக்கப்ப ட்டுள்ளது. இருந்தபோதும் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சீரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இேதபோல் கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் நேற்று 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனமும் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். மழை நின்ற பிறகுதான் பணிகள் ெதாடங்கும் என்பதால் அதுவரை இந்த சாலையில் எந்தவித வாகன போக்குவரத்தும் மேற்கொள்ளகூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இன்று காலை முதல் மழை சற்று குறைந்து இருந்தபோதிலும் தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பணியாளர்கள் சீரமைப்பை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

    ×