search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறைவு பூஜை"

    • சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி மாதத்தின் நிறைவு விழா சிறப்பு பூஜை இன்று காலை நடந்தது.
    • விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் 12-ம் ஆண்டு தனுர் மாத (மார்கழி) மாத சிறப்பு பூஜைகள் கடந்த மார்கழி 1-ந் தேதி தொடங்கியது.

    அன்று முதல் தினமும் காலையில் 5 மணிக்கு கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி, சென்னிமலை முருகப்பெருமான் மூலவர், உற்சமூர்த்திக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    பின்னர் மார்கழி மாதத்தின் நிறைவு விழா சிறப்பு பூஜை இன்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு முதல் பூஜையாக கோமாதா பூஜை நடைபெற்றது. அப்போது பசுவுக்கு தீபாராதனை செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து விநாயகர் வழிபாடு, கலச பூஜை, யாக பூஜைகள் நடந்தேறி, மூலவர், உற்சவருக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தக்குடங்களுடன் கலச புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, மஹா தீபாரதனை பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மார்கழி மாதம் இன்று நிறைவு பூஜை மற்றும் போகிப்பண்டிகை என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    சிறப்பு பூஜையில் முன்னாள் அமைச்சர் தோப்பு. வெங்கடாச்சலம் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×