search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாம் தமிழர்"

    • முத்துமலை முருகன் கோவிலில் பாரதிராஜா சுவாமி தரிசனம் செய்தனர்.
    • நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன்.

    கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ்பாண்டியன், சின்னம் தராத நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

    இந்த பிரச்சாரத்தை திரைப்பட இயக்குநர் பாரதிராஜா பங்கேற்று துவக்கி வைத்தார். முன்னதாக அவர் முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதன் பிறகு இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அதில், நான் அரசியல்வாதி அல்ல. பொது மனிதனாக சொல்கிறேன். நாம் தமிழர் கட்சியினர் சீமான் வழியில் வெற்றி பெறுவார். இளைஞர்கள் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன். எந்த சின்னம் கொடுத்தாலும் சீமான் வெற்றி பெறுவார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். என் பிள்ளை சீமானுக்கு புல்லும் ஆயுதம்

    சீமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன். எம்ஜிஆர் காலத்தில் இருந்து போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் இதுபோல குற்றச்சாட்டுகளை தெரிவித்து தான் வருகிறார்கள்" என அவர் தெரிவித்தார்.

    • தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.
    • 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்

    வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

    இது தொடர்ப்பிக்க அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலம் மக்கள் மனம், மகிழம் பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே" என மன்சூர் அலிகான் தெரிவித்துளார்.

    அண்மையில் தான் தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.

    கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாம் தமிழர் கட்சி ஆா்ப்பாட்டம் நடந்தது.
    • கபடி போட்டிக்கான தடையை நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது கபடிப் போட்டிகள் கிராமங்களில் நடத்துவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் கபடி போட்டியின் போது சில ஊா்களில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக கபடிப்போட்டிகள் நடத்த போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். போட்டி நடத்தத் தடையும் விதித்துள்ளது.

    போலீசார் நடவடிக்கையால் கபடிப் போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, தடையை நீக்க வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பு நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    ஆா்ப்பாட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்குளம் ராஜு தலைமை வகித்தார். பாராளுமன்ற தொகுதி செயலாளர் குமரன், மாவட்ட செயலா்கள் கண். இளங்கோ, காமராஜ், மாவட்டத் தலைவர் நாகூர் கனி, மாநில பேச்சாளர் வினோத் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கபடி போட்டிக்கான தடையை நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கபடிப் போட்டிக்கு அனுமதி கோரி தொடா்ந்து ஆா்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

    • சோழவந்தான் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • நாம்தமிழர் கட்சி பேரூர் நிர்வாகி சங்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெருந்தலைவர் காமராஜ ரின் 120-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி பெரியகடை வீதியில் உள்ள அவரது சிலைக்கு, நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் தலைவர் தங்கபாண்டியன், செயலாளர் பி.ராஜகுரு ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அழகர்சாமி, ஜெயராஜ், சீனி வாசன், துரைபாண்டி யன், ஜெயசேகர், பாண்டி யராஜன், ஐஸ்ஜெயராஜ், மீனா, காசியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் துணைதலைவர் லதாகண்ணன், வார்டு உறுபினர்கள் குருசாமி, சத்யபிரகாஷ், முத்துலட்சுமி சதீஸ் மற்றும் பேட்டை பெரியசாமி, பேரூர் செயலாளர் முனியாண்டி, வார்டு செயலாளர் நாகேந்திரன் தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அ.ம.மு.க. கட்சியின் ஒன்றிய செயலாளர் விரும்பராஜன் தலைமையில் பேரூர் செயலாளர்கள் திரவியம், வாடிப்பட்டி மதன், மதுரை தெற்கு மாவட்ட துணைசெயலாளர் வீரமாரிபாண்டியன், மாவட்ட விவசாய அணி முள்ளைசக்தி மற்றும் வழக்கறிஞர் காசிநாதன், மீனாட்சிசுந்தரம் ஜெயராமன், தவமணி, மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதே போல நாம்தமிழர் கட்சி பேரூர் நிர்வாகி சங்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கேரளாவுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அம்மாநில போலீசார் விசாரணை நடத்தினர். #Kerala #Seeman
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வரலாறு காணாத அளவு பெய்த மழையினால் 14 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு கேரளா திரும்பி வரும் நிலையில், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு உதவும் விதமாக பல்வேறு அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் மற்றும் மாநில அரசுகள் உதவி செய்து வருகின்றன.

    இந்நிலையில் கேரள மக்களுக்கு உதவி புரியும் வகையில் 30ற்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நாம் தமிழர் கட்சியினர் கோட்டயம் மாவட்டம் சென்றனர். சங்கனாச்சேரி பகுதியில் வெள்ள நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்க முற்பட்ட போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த பதாகைகள் இருந்ததால் சர்ச்சை உருவாகியது.

    இதனால் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக சீமான் மற்றும் அவருடன் சென்ற நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் விசாரணைக்காக கோட்டயம் மாவட்டக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர் .

    பல மணி நேர விசாரணைக்குப் பின்பு நாம் தமிழர் கட்சியினர் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு போலீசார் அனுமதி அளித்தார்கள். விசாரணைக்குப் பின்பு சீமான்தமிழகம் திரும்பினார்.
    ×