search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல் மண்டலம்"

    • பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • பொங்கல் பண்டிகை என்பதால் முன்கூட்டியே கோழிகளை விற்பனை செய்ய பண்ணையாளர்கள் முன் வந்ததால் வியாபாரிகள் விலையை குறைத்தனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்பட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் 1-ந் தேதி கொள்முதல் விலை ரூ.112 என நிர்ணயம் செய்யப்பட்டது. 5-ந் தேதி ரூ.102, 25-ந் தேதி ரூ.106, 30-ந் தேதி ரூ.112, ஜனவரி 2-ந் தேதி ரூ.114 என விலை மாறி மாறி இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 4-தேதி ரூ.5 சரிந்து கிலோவுக்கு ரூ.109 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகை நேரத்தில் கொள்முதல் விலை சரிந்துள்ளது பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    பொதுவாக பொங்கல் பண்டிகை காலங்களில் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு வெள்ளையடிப்பதால் இறைச்சி பயன்படுத்த மாட்டார்கள். அதன்படி தற்போது கிராமப்புறங்களில் 5 சதவீதம் நுகர்வு குறைந்துள்ளது. மேலும் கடந்த மாதம் ஒரு கோழி 2.5 கிலோ இருந்த நிலையில் தற்போது 2 கிலோவாக எடை குறைந்துள்ளது.

    பொங்கல் பண்டிகை என்பதால் முன்கூட்டியே கோழிகளை விற்பனை செய்ய பண்ணையாளர்கள் முன் வந்ததால் வியாபாரிகள் விலையை குறைத்தனர். அதன்படி கொள்முதல் விலையில் இருந்து கிலோவுக்கு ரூ.10 குறைத்து கொள்முதல் செய்தனர். அதனால் கறிக்கோழி விலை குறைக்கப்பட்டது. நகர்ப்புறங்களில் நுகர்வு குறையாமல் இருப்பதால் ஒரு சில நாட்களில் கொள்முதல் விலை அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×