search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழி பண்ணை"

    • மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
    • கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் கோழிப்பண்ணை நடத்தி 5 ஆயிரம் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

    மேலும் கோழிப்பண்ணைக்கு கடந்த 2 நாட்களாக செல்ல முடியாத நிலையில் இன்று காலையில் மனோஜ்குமார் சென்று பார்த்தபோது அங்கு அனைத்து கோழிகளும் உயிரிழந்து துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மனோஜ் குமார் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் அப்பகுதியில் கிடங்கு தோண்டி இறந்த கோழிகள் அனைத்தையும் புதைத்துள்ளார். அதேபோல் சிலோன் காலனி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் சுமார் 7 ஆயிரம் கோழிகளும், கவர்னகிரியில் பொன்பெருமாள் என்பவர் நடத்தி வரும் கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன. இதுகுறித்து கோழி பண்ணை நடத்தி வருபவர்கள் கூறுகையில், வங்கிகளில் கடன் வாங்கி தொழிலை நடத்தி வந்த நிலையில் அதிக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோழிகள் அனைத்தும் உயிரிழந்தது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொகை பெற்று தந்தால் மட்டுமே மீண்டும் இத்தொழிலை செய்ய முடியும் என தெரிவித்தனர்.

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
    • தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த மேட்டுநாசுவம் பாளையம், பச்சபாலி ஆண்டிகாடு தோட்டம் பகுதியில் முத்துச்சாமி (45) என்பவர் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த கோழிப்பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வளர்த்து வந்தார். இதற்காக தகர செட்டு கூரை அமைத்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை முத்துசாமி கோழி பண்ணைக்கு வந்து கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் தகரசெட்டால் வேயப்பட்ட கூரைகள் தீப்பிடித்து முழுவதும் எரிந்தது.

    இது குறித்து பவானிக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் எரிந்து பரிதாபமாக இறந்தன.

    இந்த விபத்தில் ரூ.18 லட்சம் மதிப்பிலான கோழி பண்ணை செட்டுகள், ரூ.5 லட்சம் மதிப்பிற்கான கோழிக்குஞ்சுகள் என மொத்தம் ரூ.23 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார்.

    இந்த தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை வழக்காக மாற்றம்
    • ஆரல்வாய் மொழி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அருகே சீதப்பால் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ செபஸ்தியான் (வயது 50).

    இவர் சீதப்பால் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவரது கோழிபண்ணையில் இருந்த தார்ப்பாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது.இது தொடர்பாக சீதப்பால் மேற்கு தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணிய பிள்ளை (50) அவரது மகன் சங்கர் (30) ஆகியோருக்கும் ஆன்றோ செபஸ்டியானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 17-ந்தேதி தந்தை-மகன் இருவரும் ஆன்றோ செபஸ்தியானிடம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் இரும்பு கம்பியால் ஆன்றோ செபஸ்தியானை சரமாரியாக தாக்கினார்கள். காயமடைந்த ஆன்றோ செபஸ்தியானை சங்கர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆன்றோ செபஸ்தியன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார்.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சங்கர், சிவசுப்பிரமணிய பிள்ளை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.சங்கரை போலீசார் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆன்றோ செபஸ்தியான் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பலியான ஆன்றோ செபஸ்தியான் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கி றது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • பொங்கல் பண்டிகை என்பதால் முன்கூட்டியே கோழிகளை விற்பனை செய்ய பண்ணையாளர்கள் முன் வந்ததால் வியாபாரிகள் விலையை குறைத்தனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்பட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் 1-ந் தேதி கொள்முதல் விலை ரூ.112 என நிர்ணயம் செய்யப்பட்டது. 5-ந் தேதி ரூ.102, 25-ந் தேதி ரூ.106, 30-ந் தேதி ரூ.112, ஜனவரி 2-ந் தேதி ரூ.114 என விலை மாறி மாறி இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 4-தேதி ரூ.5 சரிந்து கிலோவுக்கு ரூ.109 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகை நேரத்தில் கொள்முதல் விலை சரிந்துள்ளது பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    பொதுவாக பொங்கல் பண்டிகை காலங்களில் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு வெள்ளையடிப்பதால் இறைச்சி பயன்படுத்த மாட்டார்கள். அதன்படி தற்போது கிராமப்புறங்களில் 5 சதவீதம் நுகர்வு குறைந்துள்ளது. மேலும் கடந்த மாதம் ஒரு கோழி 2.5 கிலோ இருந்த நிலையில் தற்போது 2 கிலோவாக எடை குறைந்துள்ளது.

    பொங்கல் பண்டிகை என்பதால் முன்கூட்டியே கோழிகளை விற்பனை செய்ய பண்ணையாளர்கள் முன் வந்ததால் வியாபாரிகள் விலையை குறைத்தனர். அதன்படி கொள்முதல் விலையில் இருந்து கிலோவுக்கு ரூ.10 குறைத்து கொள்முதல் செய்தனர். அதனால் கறிக்கோழி விலை குறைக்கப்பட்டது. நகர்ப்புறங்களில் நுகர்வு குறையாமல் இருப்பதால் ஒரு சில நாட்களில் கொள்முதல் விலை அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×