search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடார் உறவின்முறை"

    • காமராஜர் அறநிலையம் சார்பில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • நாடார் உறவின்முறை உறுப்பினர் மக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.

    மதுரை

    பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலையத்தின் சார்பில் மதுரை நாடார் உறவின்முறை உறுப்பினர் மக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்த திருமண திட்டத்தின் கீழ் உறவின் முறை உறுப்பினர் எம்.நாகராஜன்- பஞ்சவர்ணம் மகள் என்.கார்த்திகா ராணிக்கும், மதுரை ஆர்.தர்மராஜ்- முத்துமாரி ஆகியோரது மகன் டி.ஜீவானந்தனுக்கும் திருமணம் மதுரை நாடார் உறவின் முறை என்.சுப்புராஜ நாடார் கிருஷ்ணம்மாள் மன்றத்தில் நடந்தது. பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலைய பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி வரவேற்றார். அறநிலைய தலைவர் ஜெமினி எஸ்.பால் பாண்டியன் தலைமை தாங்கினார். அறநிலைய பொதுச்செயலாளர் டி.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் திரும ணத்தை நடத்தி வைத்தார்.

    மதுரை நாடார் உறவின் முறை தலைவர் அனிதா ஆர்.சிவானந்தன், துணைத்தலைவர் ஆர்.முத்தரசு, பொதுச் செயலாளர் வி.பி.மணி, காமராஜர் அறநிலைய துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பி.தர்மராஜ், துணை செயலாளர் சி.பாஸ்கரன், துணைத் தலைவர் செந்தில்குமார், விடுதிக்குழு செயலாளர் பி.குமார், ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தலை வர் ஆர்.கணேசன், துணைத் தலைவர் எஸ்.பழனிக்குமார், செயலாளர் கே.ஆனந்த், இணைச் செயலாளர் ஒய்.சூசை அந்தோணி ஆகியோர் பேசினர். மணமக்களுக்கு சேலை, மாலை, கட்டில், பீரோ உள்பட சீர்வரிசைகள் காமராஜர் அறநிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்பட்டன.

    • சிம்மக்கல் நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆர்.வி.டி. ராமையா இன்று அதிகாலை காலமானார்.
    • 19 ஆண்டுகளாக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்த நாள் அன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆர்.வி.டி. ராமையா இன்று அதிகாலை காலமானார். இவர் ஆர்.வி.டி. டூல்ஸ், ஆர்.வி.டி. இன்டஸ்ட்ரீஸ், பாரத் டிரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தார்.

    காலமான ஆர்.வி.டி. ராமையா பல்வேறு சமுதாய பணிகளை ஆற்றி வந்தார். மேலும் கடந்த 19 ஆண்டுகளாக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்த நாள் அன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார்.

    ஆர்.வி.டி. ராமையாவின் உடல் சிம்மக்கல் தமிழ்ச்சங்கம் ரோட்டில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், அனைத்து அரசியல் கட்சியினர், வியாபாரிகள், சமுதாய பெருமக்கள், நண்பர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆர்.வி.டி. ராமையாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் நடக்கிறது. சிம்மக்கல்லில் உள்ள அவரது வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கி, தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

    ×