search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகமங்களா"

    மைசூர் மான்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது நாகமங்களா. நாகதோஷத்தைப் போக்கி மங்கலத்தை அருள்வதால், நாகமங்களா என்று பெயர்.
    கோயில் பலவற்றில், பாஞ்சஜன்யத்தை இடக்கரத்தில் கொண்டு திகழும் பரம்பொருள், வலக்கரத்தில் கொண்டு காட்சி தருகிறார், நாகமங்களாவில் சகலவித மந்திர- தோஷங்களையும், ராகு - கேது முதலான நாகதோஷங்களையும் உள்ளடக்கிக் கொண்ட பாஞ்சஜன்யத்தை வலக்கரத்தில் ஏந்தியபடி, அன்று குருக்ஷேத்திரத்தில் காட்சி தந்த அதே திருக்கோலத்தில், இன்றும் நாகமங்களா கோயிலில் காட்சி தருகிறார், ஸ்ரீசௌம்யகேசவ பெருமாள். பார்த்தனுக்கு மட்டுமின்றி, தன்னைச் சரணடையும் அடியவர்கள் எல்லோரது துயரங்களையும் வேரறுக்கும் பெருமாள் இவர். இந்தக் கோலத்தில் பெருமாளைத் தரிசிப்பது அரிது என்கின்றனர், பக்தர்கள்.

    கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில், மான்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது நாகமங்களா. நாகதோஷத்தைப் போக்கி மங்கலத்தை அருள் வதால், நாகமங்களா என்று பெயர். மேலும், ஆதிசேஷனைக் குறிக்கும் விதமாக இந்தத் திருத்தலத்தை அனந்த க்ஷேத்திரம் என்றும் போற்றுவர்.

    ஸ்ரீசௌம்யகேசவர் கோயிலை நெருங்கினாலே, நமது தோஷங்களும் பாபங்களும் சூரியனைக் கண்ட பனி போல மறையும்!



    'தோலாயமான கோவிந்தம் மஞ்சஸ்துவம் மதுசூதனம்
    ரதஸ்துவம் கேசவம் திருஷ்டுவஹா
    புனர்ஜென்மம் நதித்யதே’

    - இந்த ஸ்லோகத்துக்கு, 'தேரில் உட்கார்ந்திருந்த கேசவ னைத் தரிசித்தால் மறு ஜென்மம் இல்லை’ என்று பொருள்! நீங்களும் நாகமங்களா நாயகனை தரிசியுங்கள்; வாழ்வில் நலன்கள் யாவும் கைகூடும்!

    குடும்பத்தில் சச்சரவு, மனக் குழப்பம், தீராத நோய், பயம், தொழில் நஷ்டம், திருமணத் தடை, சந்தான பாக்கியம் இல்லாமை, ராகு- கேது தோஷங்கள் என சகலமும், இங்கே வந்து தரிசித்தால் நீங்கும்.
    ×