search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாக சதுர்த்தி விரதம்"

    • உடன் பிறந்த சகோதரர்களின் நலனுக்காக சகோதரிகள் கடைப்பிடிக்கும் விரதம் இது.
    • புத்திரப் பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    அன்று இல்லத்தைக் கூட்டி மெழுகிச் சுத்தம் செய்து, சுதையில் நாகம்போல் செய்து வைத்து,

    அதற்குப் பச்சரியில் நைவேத்தியம் செய்து வைத்துப் படைத்து தீப தூப நைவேத்தியம் செய்து வைத்துப் படைத்து

    தீப தூப நைவேத்தியங்களுடன் அந்நாகத்தைப் பாராயணப் பாடல்களுடன்

    புற்றுக்குப் பக்கத்தில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்து விடுவார்கள்.

    சிலர் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி ஆகிய விரதங்களை தங்கள் விருப்பம் போல் மேற்கொள்ளுவார்கள்.

    விரதம் எதுவாயினும் அன்றையதினம் பாம்புப் புற்றில் பால் வார்த்து புஷ்பங்களைச் சார்த்தி,

    பழம் முதலியவற்றை வைத்துப் பூஜை செய்யலாம்.

    உடன் பிறந்த சகோதரர்களின் நலனுக்காக சகோதரிகள் கடைப்பிடிக்கும் விரதம் இது.

    புத்திரப் பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    நாகபூஜை  விஷ பயத்தினின்று விடுவிக்கும்.

    ×