search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலதிட்ட உதவிகள்"

    • ரூ.30லட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
    • கலெக்டர் வழங்கினார்

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கே.வேளூரில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாமில் ரூ.30 லட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

    ஆற்காடு அடுத்த கே.வேளூரில் ஒழலை, கரிவேடு, கரிக்கந்தாங்கல், கிளாத்தாங்கல் ஆகிய ஊராட்சிகளுக்கான சிறப்பு மனுநீதிமுகாம் கேவேளூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்றது.

    முகாமிற்கு ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், துணை கலெக்டர் தாரகேஸ்வரி முன்னிலை வகித்தனர். தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஊராட்சி மன்றத்தலைவர் வளர்மதி நந்தகுமார், துணை தலைவர் ரஞ்சிதா கோபு ஆகியோர் வரவேற்றனர். முகாமில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர், ஆதரவற்றோர் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான உதவித்தொகை, தென்னங்கன்றுகள் தீவனச்சோளவிதைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

    முகாமில் வருவாய், வேளாண், தோட்டக்கலை, மாற்றுதிறனாளிகள்ஆகிய துறைகள் சார்பில் 168 பயனாளிகளுக்கு ரூ.30லட்சத்து 80ஆயிரம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

    முகாமிற்கு வருவாய் ஆய்வாளர் வினோத், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், சமூக ஆர்வலர் கே.வேளூர் ராமன், கிராம உதவியாளர் சரிதா, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சிமன்ற உறுப்பினர் பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர்.

    ×