search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நறுவல்லிப் பழங்கள்"

    • வாழப்பாடி அரசு மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த மூலிகைத் தாவரம் பெரிய மரமாக வளர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக காய்த்து கனிந்து வருகிறது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அரசு மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டு பராம ரிக்கபப்ட்டு வருகிறது. இந்த தோட்டத்தில் 10 ஆண்டுக்கு முன் பணிபுரிந்த சித்த மருத்துவர் செல்வக்குமார், 'கார்டியா டொகோடோமா' எனும் தாவரவியல் பெயர் கொண்ட மருத்துவ குணம் கொண்ட சிறு மரவகை மூலிகையான 'நறுவல்லி' தாவரத்தை சதுரகிரி மலைப்பகுதியில் இருந்து கொண்டுவந்து நட்டுள்ளார். இந்த மூலிகைத் தாவரம் பெரிய மரமாக வளர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக காய்த்து கனிந்து வருகிறது.

    நறுவல்லி மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டதாகும். இளம் வயதினரின் முகப்ப ருக்களை இலைச்சாறு போக்கும். இலையை அரைத்து வெண்ணையுடன் சேர்த்து உட்கொண்டால் மலச்சிக்கலும், மூலநோயும் குணமாகும்.

    மரப்பட்டைச் சாறுடன், தேங்காய்ப்பால் சேர்த்து பருகினால் கடுமையான வயிற்று வலியும் குறையும். பட்டை, கொட்டையின் பொடி, பித்தம், அக்கி, குடற்புண், சிறுநீர் குழாய் நோய்களை தீர்க்கும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காய்க்கும் பசை போன்ற திரவத்துடனும் துவர்ப்பு கலந்த இனிப்பு சுவையுடைய நறுவல்லி பழங்களுக்கு, ஆண்மையை அதிகரித்து உடலை உறுதியாக்கும் மருத்துவ குணங்கள் உண்டு.

    வாழப்பாடி அரசு மருத்துவமனை மூலிகைத் தோட்டத்திலுள்ள நறுவல்லி மரத்தில் தற்போது கொத்து கொத்தாக பழங்கள் கனிந்துள்ளன. இதன் மகத்துவம் தெரிந்தவர்கள் பறித்து உண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

    ×