search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரிக்குறவ மாணவர்கள்"

    • நரிக்குறவ மாணவ- மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ்களை பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் ஆகியோர் வழங்கினர்.
    • தனியார் கல்லூரி பங்களிப்புடன் புத்தகப்பை, நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மான் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வசித்து வரும் இவர்களின் குழந்தைகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    கோடை விடுமுறைக்கு பின் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் நரிக்குறவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

    இதையடுத்து பூந்தமல்லி அம்மான் நகர் பகுதியில் நரிக்குறவ மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நரிக்குறவ மாணவ- மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ்களை பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் ஆகியோர் வழங்கினர். மேலும் தனியார் கல்லூரி பங்களிப்புடன் புத்தகப்பை, நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் காஞ்சனா சுதாகர் பேசும்போது, நரிக்குறவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடியில் நரிக்குறவ மாணவிகள் வீட்டுக்கு சென்று உணவு அருந்தியது குறித்தும் பேசினார்.

    இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன், வழக்கறிஞர் மாலினி ஆகியோர் நரிக்குறவ இன மாணவ மாணவிகளுக்கு கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும், கல்வியினால் ஏற்படும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் எடுத்துக் கூறி தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். கல்லூரி மாணவ - மாணவியர் மற்றும் நரிக்குறவ மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நகர்மன்ற துணைத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

    ×