search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நன்றாக இருக்கும்"

    • அ.தி.மு.க. மீனவர் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
    • முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேரடி திடலில் அ.தி.மு.க. மீனவர் அணி சார்பில் மீனவர் அணி ஒன்றிய செயலாளர் விசுவ நாதன் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

    மீனவர்கள் மற்றும் மீனவ சங்கத்தின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் மீன்பிடி பொது ஏல அறிவிப்பை கொண்டு வந்த தி.மு.க. அரசின் அறிவிப்பை நிறுத்தி வைப்பதற்கும், சட்டத்தின் மூலமாக மீன்பிடிக்கும் உரிமை மீனவர்கள் சங்கங்களுக்கே உரிமை உண்டு என்ற நிரந்தரமான நல்ல தீர்ப்பை பெறு வதற்கும் உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பா ளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    மீனவர்களின் நலன் காக்கும் வகையில் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் இயக்கம் அ.தி.மு.க.. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் இன்று மனம் மாறி இருக்கிறார்கள். ஏன் இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என்று மக்கள் நினைத்து கொண்டு இருக்கும் நேரம் இந்த நேரம்.

    வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையில் 40 இடமும் வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தல் வரும்போது தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக எடப்பாடியார் தலைமையில் சட்டமன்றம் உருவாகும். இது எவராலும் மாற்றிகாட்ட முடியாது என்பதை மக்களே மாற்றி காட்டுவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கி ன்றேன்.

    தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டு ள்ளது. இன்னும் சில மது கடைகள் மூட வேண்டும் என்பது மக்களின் கோரி க்கை. எந்த பகுதியில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்துகின்றா ர்களோ அந்த இடங்களில் மூடினால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பர்கூர் உண்டு உறைவிட பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிக் கல்வித்து றையை பொறுத்தவரை ஆதி திராவிட நலத்துறை பழங்குடி பள்ளி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளி அனைத்தும் ஒன்றாக இணைக்கப்ப ட்டுள்ளது.

    அனைத்திற்கும் ஆசிரியர்கள் தேவை என்ற முறையில் அதை பூர்த்தி செய்வதாக சட்டமன்றத்தில் உரையாற்றும்போது கூறினார்கள். இன்று வரை ஆசிரியர்கள் நிரப்பப் படவில்லை. அவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் நிரப்பப் படவில்லை என்றாலும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக தற்காலிக ஆசிரியர் களை நியமிக்கலாம்.

    அதற்கு விதிமுறை இருக்கின்றது.ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் படித்து விட்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏராள மானோர் உள்ளார்கள். அவர்களை கொண்டு எந்தெந்த பாடத்திற்கு தேவையான ஆசிரியர்களை நியமித்தால் மாணவர் களுக்கு சிறந்த கல்வியை தர முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தேவராஜ் வரவேற்றார். ஒன்றிய துணைச்செயலாளர் எஸ். ஜி.சண்முகானந்தம் வாழ்த்துரை வழங்கினார். கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மோகன் குமார் சிறப்புரை யாற்றினார்.

    ஒன்றிய செயலாளர் நாராயணன், அந்தியூர் நகரச்செயலாளர் டி.எஸ். மீனாட்சி சுந்தரம், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.பி.பழனிச்சாமி, நகர பேரவை செயலாளர் பாலுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் டி.கே.வி.ஈஸ்வரன், மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் ராஜா சம்பத், அந்தியூர் தொடக்க வேளான்மை கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜ்,

    மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அலையோசை அந்தோணி, அத்தாணி பேரூராட்சி கவுன்சிலர் வேலு மருதமுத்து, ரமேஷ், கனகராஜ், 1-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன், ஒன்றிய பேரவை செயலாளர் ஓட்டல் கிருஷ்ணன், சவுந்தர், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராமச்சந்திரன், துணைச்செயலாளர் எம்.எஸ்.சந்திரன்,

    சிறுபான்மை பிரிவு ஜான்சன், பிரம்மதேசம் நடராஜ், மீனவர் அணி நிர்வாகிகள் ராமர், மணி, மூர்த்தி, ராஜா, துரைசாமி, மணிகண்டன், சரவணன், பிரகாஷ், கார்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நகர இளைஞரணி செயலாளர் பார்மோகன் நன்றி கூறினார்.

    ×