search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நண்டு சூப்"

    • குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது.
    • நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது.

    கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். மீன் வகைகளைக் காட்டிலும், நண்டு, இறால் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள்.

    நண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது.

    கடல் உணவுகளில் ஒன்றான நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. சளி, இருமல் என்ற தொந்தரவு ஏற்பட்டாலே நண்டு வாங்கி சமைத்து சாப்பிடுபவர்கள் அதிகம். நண்டு ரசம், சூப் போன்ற உணவுகளில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் மருத்துவ பண்புகள் நிறைந்திருக்கும்.

    நண்டு குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. சளி, இரும்மல், தொண்டை வலி ஆகியவற்றை சரி செய்யக்கூடியது.

    தலை வலி, தலை பாரம், சளி, இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற தொந்தரவு உள்ளவர்கள் நண்டு சூப் செய்து சாப்பிட்டால் போதும்.

    நல்ல நிவாரணம் கிடைக்கும். பின் எப்போதெல்லாம் காய்ச்சல், இருமல் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இந்த நண்டு சூப்பை செய்து சாப்பிட்டாலே போதுமானது.

    ஆனால் சளி பிடிக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, மனதில் ஆசை தோன்றி விட்டால் உடனே சமைத்து சாப்பிடுங்கள். கிராமங்களில் கை வைத்தியமாக வயல் வெளியில் கிடைக்கும் நண்டுகளை வைத்து சூப் செய்து சாப்பிடுவது வழக்கம். நண்டு சூப் வைப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    நண்டு - 2

    தக்காளி - 1

    பெரிய வெங்காயம் - 1

    இஞ்சி - சிறு துண்டு

    மிளகு - அரை ஸ்பூன்

    சீரகம் - கால் ஸ்பூன்

    எண்ணெய் - 3 ஸ்பூன்

    பூண்டு - 4 பல்

    பச்சைமிளகாய் - 2

    பட்டை - தேவையான அளவு

    பிரியாணி இலை - தேவையான அளவு

    கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நண்டின் சதைப்பகுதி வெளியில் வரும் அளவுக்கு தட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இஞ்சி, பூண்டையும் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். நன்றாக வதங்கியவுடன் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது தண்ணீர் போதுமான அளவு ஊற்ற வேண்டும்.

    தண்ணீர் நன்றாக கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு போடவும். நண்டு நன்கு வெந்ததும் மிளகு, சீரகத்தூள் போட வேண்டும். நண்டு ஓடு அடியில் இருக்கும் அதனால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவி சுடச் சுட பறிமாறவும். இதோ சுவையான நண்டு சூப் ரெடி.

    ×