search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நஞ்சுண்டேஸ்வரர் கோவில்"

    • நஞ்சுண்டேசுவரருக்கும், பழனி ஆண்டவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் பாலதொழுவு ஊராட்சியில் உள்ளது நஞ்சுண்டேசுவரர் கோவில்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புலிங்கமாக தோன்றிய நஞ்சுண்டேசுவரருக்கு கண்ணடக்கம், கண் மலர் ஆகியவற்றை காணிக்கை யாக வழங்கி வழிபட்டால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என நம்பிக்கையாக உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்று நள்ளிரவு 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து நஞ்சுண்டேசுவரருக்கும், பழனி ஆண்டவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அப்போதே பக்தர்கள் திரண்டு விட்டனர்.

    இதில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 2 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக சென்னிமலை, ஊத்துக்குளி ஆகிய ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    ×