search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை கடன் தள்ளுபடி"

    • 5 பவுன் நகை கடன் தள்ளுபடிக்கு, சேலம் உள்பட 4 மாவட்டங்களுக்கு ரூ.206.66 கோடி விடுவிக் கப்பட்டுள்ளது.
    • இந்த தொகையை அரசே கூட்டுறவு நிறுவனங்களுக்கு தவணை முறையில் வழங்குகிறது.

    சேலம்:

    கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடிக்கு, சேலம் உள்பட 4 மாவட்டங்களுக்கு ரூ.206.66 கோடி விடுவிக் கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 2021-ம் ஆண்டு மார்ச் வரை வழங்கப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட தங்க நகை கடன்களை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்து, உத்தரவிட்டது.

    இதற்கான நிபந்தனைகளில் கீழ் தேர்வான ரூ.14.62 லட்சம் பேரின், ரூ.5013 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தொகையை அரசே கூட்டுறவு நிறுவனங்களுக்கு தவணை முறையில் வழங்குகிறது. அதன்படி 2021-2022ம் ஆண்டு ரூ.1215 கோடி வழங்கப்பட்டது.

    நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடி வழங்கப் பட்டது. தற்போது 2-ம் கட்டமாக ரூ.1000 விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. மாவட்ட வாரியாக கூட்டுறவு சங்கங்கள் வாரியாக இத் தொகை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

    இத்தொகையினை மத்திய கூட்டுறவு வங்கி களின் மேலாண்மை இயக்குனர்கள் அச்சங்கங் களுக்கு உடனடியாக விடுவிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, சேலம் மாவட்டதுக்கு ரூ.112.63 கோடியும், நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ.46.99 கோடியும் விடுவிக்கப் பட்டது. இதேபோல், தர்மபுரி மாவட்டத்துக்கு ரூ.29.60 கோடியும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.19.44 கோடியும் என மொத்தம் ரூ.208.66 கோடி நகைகடன் தள்ளுபடிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங் களுக்கும் நகர கூட்டுறவு வங்கிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×