search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகர் பகுதியில் காட்டெருமை கூட்டம்"

    • சில தினங்களாக குடியிருப்பு பகுதிகளில் காட்டெ ருமைகள் முகாமிடுவதும், நகர் பகுதிகளில் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது.
    • வனத்துறையினர் தனி கவனம் செலுத்தி நகர்ப்பகுதிக்குள் காட்டெருமைகள் உலா வருவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடியிருப்பு பகுதிகளில் காட்டெ ருமைகள் முகாமிடுவதும், நகர் பகுதிகளில் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது.

    மேலும் விவசாய நிலங்க ளில் காட்டெரு மைகள் புகுந்து விவசாய நிலங்களை யும், பயிர்களையும் சேத ப்படுத்து வதுடன் விவசாயிகளையும் தாக்கி வருவது தொடர் கதையாக உள்ளது.

    இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக அதிக மக்கள் கூடும் இடங்களான அண்ணாசாலை, பஸ் நிலையம், ஏழுரோடு சந்திப்பு உள்ளிட்ட இட ங்களில் 10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்ட மாக உலா வந்ததால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா ப்பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    மேலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அச்சத்துடன் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறை யினர் சுமார் 1 மணி நேரமாக போராடி காட்டெ ருமைகளை வனப்பகுதி க்குள் விரட்டிச் சென்றனர். கடந்த சில தினங்களாக பொதுமக்களையும், கால்ந டைகளையும் காட்டெரு மைகள் தாக்கி வருகின்றன.

    எனவே வனத்துறையினர் தனி கவனம் செலுத்தி நகர்ப்பகுதிக்குள் காட்டெருமைகள் உலா வருவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். காட்டெருமைகள் நகர்பகுதி க்குள் வருவதை கண்கா ணிக்க கூடுதலாக வனப்ப ணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×