search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்டப்பயிர்களை"

    • அதிகாரி விளக்கம்
    • வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:- குமரி மாவட்டமானது தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டையும் ஒருங்கே கிடைக்கப்பெறும் மாவட்டமாகும். தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும். தோட்டக்கலை பயிர்களில் பொதுவாக அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைத்தல், மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்த்தல், கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தை குறைக்க உபரிநீர் வடிந்த பின் நடவு, விதைப்பணிகளை மேற்கொள்ளல், வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்து மழைநீர் தேக்கத்தை தவிர்த்தல், காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்தல், மழைநீர் வடிந்தபின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    எனவே குமரி மாவட்ட வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை மேற்கொண்டு வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ளுமாறும், மேலும் பாதிப்பு ஏற்பட்டால் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×