search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலதிபா்கள்"

    • மதுரையில் உள்ள சுங்கவாரிய அலுவலகத்தை கோவைக்கு மாற்றக்கூடாது என கப்பலூர் தொழிலதிபா்கள் சங்கம் வலியுறுத்தினர்.
    • கோவைக்கு மாற்றினால் தென்மாவட்டங்களை சேர்ந்த சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்கள் கோவைக்கு செல்லும் நிலை ஏற்படும்.

    திருமங்கலம்

    கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தலைவர் ரகுநாதராஜா கூறியதாவது:-

    மத்திய கலால் மறைமுக வரிகள் சுங்கவாரிய தலைமை கமிஷனர் உத்தரவின் பேரில் சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் திருச்சி ஆகிய 5 இடங்களில் மேல்முறையீட்டு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    சிறு, குறுந்தொழில்கள் எதிர்கொள்ளும் ஜி.எஸ்.டி. கலால் சுங்கவரி சார்ந்த வழக்குகளை மேல்முறையீடு அலுவலகத்தில் தாக்கல்செய்து சிறு, குறு தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகிறோம். தற்போது மதுரை மண்டலத்தில் 250-க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி. குறித்த 1000-க்கும் மேற்பட்ட மத்திய கலால் சுங்கவரி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்தநிலையில் இந்த அலுவலகத்தை கோவைக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கோவைக்கு மாற்றினால் தென்மாவட்டங்களை சேர்ந்த சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்கள் கோவைக்கு செல்லும் நிலை ஏற்படும். இதனால் நேரம், வீண்செலவுகள் மற்றும் அலைச்சல் ஏற்படும்.

    கொரோனா பின்னடைவுக்கு பின் தற்போது தொழிற்சா லைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் மத்திய கலால் கமிஷனர் அலுவலத்தில் செயல்படும் மண்டல மேல்முறையீடு அலுவலகத்தை உடனடியாக முறையான அதிகாரிகளை நியமித்து மதுரை மண்டல மேல்முறையீடு அலுவலகம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×