search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் விடுப்பு போராட்டம்"

    • பணி சுமையை குறைக்க வேண்டும் ,கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை அரசு தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • 12-ம் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது .

    நாகர்கோவில்:

    பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் 12-ந் தேதி முதல் 3- நாள் தொடர் விடுப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

    ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சிகளில் வரி வசூல் செய்தல், மின்விளக்குகள் பராமரித்தல் ,100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் ,முழு சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஊராட்சி செயலாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும் ,கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை அரசு தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தினை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் 12-ம் தேதி முதல் 14-ந் தேதி வரை 3- நாள் ஊதியம் இல்லா விடுப்பு போராட்டம் நடைபெற உள்ளது .

    இதையடுத்து குமரி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் 3- நாள் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளனர்.

    இதையடுத்து அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் நடத்துவது குறித்த விடுப்பு கடிதத்தை ஊராட்சி செயலாளர்கள் சங்க குமரி மாவட்ட துணைத் தலைவர் காளியப்பன் தலைமையில் ஒன்றிய நிர்வாகி டேனியல் முன்னிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல பாலகிருஷ்ணனிடம் வழங்கினர்.

    ×