search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடரும் மழை"

    • தேனி மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்துவரும் சாரல் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • மழைப்பொழிவால் மானாவாரி பயிரிட்ட விவசாயிகளும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. திண்டு க்கல், தேனி மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்துவரும் சாரல் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இந்தநிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தேனி, திண்டு க்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி நேற்றுமாலை சாரல் மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்ட த்துடனே உள்ளது. இதனால் மழை பெய்யும் என எதிர்பார்த்து உள்ளனர்.

    கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல்சாகுபடி செய்த விவசாயிகள் 2-ம் கட்ட உரம் மற்றும் மருந்து தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நெற்பயி ர்களில் கதிர் தள்ளும் பருவம் என்பதால் மழை ஏதுவாக இருக்கும். மேலும் மானாவாரி பயிரிட்ட விவசாயிகளும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 118.90 அடியாக உள்ளது. அணைக்கு 515 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.08 அடியாக உள்ளது. 54 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50 அடியாக உள்ளது. 21 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.88 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிற நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்த கனமழையால் கும்ப க்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் வரத்து சீராகி உள்ளதால் அனுமதி அளித்து வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பெரியாறு 12, தேக்கடி 13.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 2.2, சண்முகாநதிஅணை 3, போடி 6.2, மஞ்சளாறு 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×