search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோ் திருவிழா"

    • மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
    • உப்புப்பாளையம் சாலையைச் சோ்ந்த சிவகுமாா் ரூ. 3 லட்சத்து 81 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளாா்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோவில் தோ் திருவிழா கடைகள் ரூ. 3.81 லட்சத்துக்கு ஏலம்போனது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    நடப்பாண்டு தோ் திருவிழா வரும் பிப்ரவரி 19 ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி திருவிழாவில் தற்காலிக கடைகள் அமைத்து சுங்க வசூல் செய்யும் உரிமைக்கான பொது ஏலம் கோவில் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

    திருப்பூா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் செல்வராஜ் தலைமை வகித்தாா். காங்கயம் அறநிலையத் துறை ஆய்வாளா் அபிநயா, கோயில் செயல் அலுவலா் ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கோவில் குலத்தவா்கள், பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஏலத்தில் 5 நபா்கள் கலந்துகொண்டனா். இவா்களில் உப்புப்பாளையம் சாலையைச் சோ்ந்த சிவகுமாா் ரூ. 3 லட்சத்து 81 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளாா். 

    ×