search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய போர் நினைவு சின்னம்"

    டெல்லியில் தேசிய போர் நினைவு சின்னத்தில், உயிர்நீத்த வீரர்களின் பெயர்களை கண்டு பூரிப்படைந்ததாக விமானப்படை விங் கமாண்டர் கூறியுள்ளார். #Modi #NationalWarMemorial #SushmitaSekhon
    புதுடெல்லி:

    டெல்லியில், இந்தியா கேட் வளாகத்தையொட்டி, 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.176 கோடி செலவில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில், பல்வேறு தருணங்களில் உயிர்நீத்த 25 ஆயிரத்து 942 ராணுவ வீரர்களின் பெயர்கள் கிரானைட் கற்களில் தங்க எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன. பிரமாண்ட ஸ்தூபியும், அணையா தீபமும், இந்திய ராணுவம் ஈடுபட்ட முக்கிய போர்களை விளக்கும் 6 சுவர் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.



    பிரதமர் மோடி, இந்த போர் நினைவு சின்னத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதை குறிக்கும் வகையில், அவர் தீபத்தை ஏற்றிவைத்தார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து ரோஜா பூக்கள் தூவப்பட்டன.

    இந்நிலையில் இது குறித்து இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் சுஸ்மிதா செக்கான் கூறுகையில், “நாட்டிற்காக தங்கள் இன்னுயிர் நீத்த வீரர்களின் பெயர்கள் இந்த சின்னத்தில் இடம் பெற்றதை கண்டு பூரிப்படைந்தேன். இந்த நிகழ்வில் நானும் பங்கு வகித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் இந்த போர்  நினைவு சின்னத்தின் முக்கியத்துவம் குறித்து நன்கு அறிந்தவர்கள்” என்றார்.

    சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவே முதல் தேசிய போர் நினைவு சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #NationalWarMemorial #SushmitaSekhon

    ×