search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துபாய் தீ விபத்து"

    • கட்டிடத்தில் தீ பற்றி எரிவதை கண்ட குடு சாலிய கூண்டு தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றபோது பலியானது தெரிய வந்தது.
    • ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் துபாய் தீ விபத்தில் பலியான சம்பவம் ராமராஜபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துபாய் தீ விபத்தில் 2 பேர் பலியானதால் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர்.

    துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான டெய்ரா பகுதி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக விளங்கி வருகிறது.

    இங்குள்ள பிரிஜ் முரார் என்ற இடத்தில் உள்ள அல் கலீஜ் சாலையில் 5 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது.

    இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வசித்து வந்த இந்தியர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். அவர்களில் 2 பேர்கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த குடு சாலிய கூண்டு (49) மற்றும் இமாம் காசிம் அப்துல் காதர் (43) ஆவார்கள்.

    இதில் குடு சாலிய கூண்டு தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர். கட்டிடத்தில் தீ பற்றி எரிவதை கண்ட குடு சாலிய கூண்டு தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றபோது பலியானது தெரிய வந்தது.

    பலியான மற்றொருவரான இமாம் காசிம் அப்துல் காதர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தவர்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் துபாய் தீ விபத்தில் பலியான சம்பவம் ராமராஜபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான 2 பேரின் உறவினர்களும் அங்கு துக்கம் விசாரிக்க வந்தனர்.

    ஆனால் 2 பேரின் குடும்பத்தினரும் நேற்று முன்தினம் இரவே சென்னை சென்றுவிட்டனர். இதனால் இருவரது வீடும் பூட்டியே உள்ளது.

    துபாய் தீ விபத்தில் பலி யான 2 பேரின் உடல்களும் இன்னும் 3 நாட்களில் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். உடலை பெற்றுக் கொள்ளவே இருவரது உறவினர்களும் சென்னை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் பலியான 2 பேரின் உறவினர்கள் தெரிவித்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்டிடத்தில் தீ பற்றி எரிவதை கண்ட குடு சாலிய கூண்டு தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற போது பலியானது தெரிய வந்தது.
    • தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை:

    துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான டெய்ரா பகுதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக விளங்கி வருகிறது.

    இங்குள்ள பிரிஜ் முரார் என்ற இடத்தில் உள்ள அல் கலீஜ் சாலையில் 5 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது.

    இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வசித்து வந்த இந்தியர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். அவர்களில் 2 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த குடு சாலிய கூண்டு (49) மற்றும் இமாம் காசிம் அப்துல் காதர் (43) ஆவார்கள்.

    இதில் குடு சாலிய கூண்டு தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர். கட்டிடத்தில் தீ பற்றி எரிவதை கண்ட குடு சாலிய கூண்டு தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற போது பலியானது தெரிய வந்தது. பலியான மற்றொருவரான இமாம் காசிம் அப்துல் காதர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தவர்.

    இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த குடு சாலிய கூண்டு மற்றும் இமாம் காசிம் இருவரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • துபாயின் அல்ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துபாய்:

    துபாயின் அல்ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அக்கட்டிடத்தின் 4-வது மாடியில் தீப்பிடித்தது. பின்னர் தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

    இதனால் கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. கட்டிடத்துக்குள் தீ மற்றும் புகை சூழ்ந்ததால் மக்கள் வெளியேறாமல் சிக்கினர். தீயணைப்பு படையினர் மற்றும் மீட்டு குழுவினர் அங்கு விரைந்து வந்து கட்டிடத்தில் இருந்தவர்களை வெளியேறினர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடினர். சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    இந்த விபத்தில் 16 பேர் பலியானார்கள். இதில் 4 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்தது. தமிழகத்தை சேர்ந்த 2 ஆண்கள், கேரளாவை சேர்ந்த தம்பதி ஆகியோர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக துபாயில் உள்ள இந்திய சமூக சேவகர் நசீர் வடனப் பள்ளி என்பவர் கூறும் போது, `கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆண்கள், கேரளாவை சேர்ந்த தம்பதி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானை சேர்ந்த 3 பேரும், நைஜீரிய பெண் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம், அதிகாரிகள், பலியானவர்களின் நண்பர்கள், உறவினர்களை தொடர்புகொண்டு வருகிறோம்' என்றார். பலியானவர்களில் தமிழகத்தை சேர்ந்த அப்துல் காதர், சாலியாகுண்ட், கேரள மலப்புரம் வெங்கரையை சேர்ந்த ரிஜேஷ், அவரது மனைவி ஜிஷி என்பது அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரிஜேஷ் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராகவும் ஜிஷி பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தனர்.

    தீவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அக்கட்டிடத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று துபாய் குடிமை தற்காப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்படு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ×