search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை முதல்வர் சிசோடியா"

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளின் வீட்டிற்கு சென்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் சிசோடியா இன்று வாழ்த்துகள் தெரிவித்தனர். #ManishSisodia #ArvindKejriwal
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

    பாரதி ராகவ்

    இந்த தேர்வில் டெல்லியில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.19 சதவீதமும், 84.93 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்ற ஆண்டை விட டெல்லி தேர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. இதில் டெல்லியைச் சேர்ந்த பிரின்ஸ் குமார் அறிவியல் பாடத்தில் 97 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளார். கவுசிக் மனிதநேயம் துறையில் 95.6 சதவீதமும் பெற்றுள்ளான். பாரதி ராகவ் மற்றும் பிரகாஷ் வணிகவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    சித்ரா கவுசிக்

    இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியரை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகிய இருவரும் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துகள் தெரிவித்தனர். தொழிற்கல்வியில் முதலிடம் பிடித்த ஷாக்நாஸை சந்தித்தனர்.

     பிரின்ஸ் குமார்

    அதன்பின் செய்தியார்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், 'கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. கல்விக்காக பட்ஜெட் 5 ஆயிரம் ரூபாய் கோடியிலிருந்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இது முதலீடு செய்வது. செலவு செய்வது அல்ல. நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்கிறோம். குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலம். நாட்டின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்கிறோம். அதற்கான முடிவுகள் இப்போது கிடைத்துள்ளது' என கூறினார். #ManishSisodia #ArvindKejriwal

    ×