search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவைத்த கணவன்"

    • தனக்குத் தானே தீவைத்து கொண்டதாக வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.
    • பின்னர் முத்துக்குமரன் அவரது சகோதரி கலையரசியும் சேர்ந்து மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாகவும் கூறியுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள வழுதாவூரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், அவரது மனைவி சங்கீதா. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனை ஏற்றுக்கொள்ளாத சங்கீதாவின் தாயார் சரோஜா விஷம் குடித்து இறந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 5-ந் தேதி உடலில் தீக்காயங்களுடன் சங்கீதா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தனக்குத் தானே தீவைத்து கொண்டதாக வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நேற்று முதல் சமூக வளைதளங்களில் சங்கீதா வெளியிட்டுள்ள வீடியோவில், தனது கணவர் முத்துக்குமரன் தன்னை வரதட்சனை வாங்கி வரச் சொல்லி கொடுமைப் படுத்தியதாகவும், முத்துக்குமரன் அவரது சகோதரி கலையரசியும் சேர்ந்து மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாகவும் கூறியுள்ளார்.மேலும், இதனை வெளியில் கூறினால் உனது பிள்ளைகளையும் மண்ணெண்ணைய் ஊற்றி கொளுத்திவிடுவேன் என்று மிரட்டியதால், என்மீது யாரும் மண்ணைண்ணைய் ஊற்றி கொளுத்தவில்லை. தனக்குத் தானே தீவைத்துக் கொண்டதாக வாக்குமூலம் அளித்தாகவும் கூறியுள்ளார்.

    தனது உறவினர்கள் தன்னிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் இப்போது இந்த உண்மையை கூறுவதாகவும் இந்த வீடியோவில் சங்கீதா கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக உள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சங்கீதா உயிரிழந்தார்.

    இதையடுத்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த கண்டமங்கலம் போலீசார் முத்துக்குமரனை கைது செய்து, அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    தீக்குளிக்க முயன்ற மனைவி மீது கணவனே தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×