search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளிக்கு"

    • ஈரோடு மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான வெளியூர் மக்கள் வசித்து வருகின்றனர்.
    • ஈரோடு மண்டலம் சார்பில் நாளை முதல் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையொட்டி வரும் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான வெளியூர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டலம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகின்ற 25-ந் தேதி வரை 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 11 அரசு போக்குவரத்து கிளைகளில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், மேட்டூர், நாமக்கல் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். தீபாவளி பண்டிகையொட்டி கூடுதலாக 50 பஸ்கள் பயணிகளின் கூட்டத்தை பொருத்து இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக சித்தோடு அடுத்த கங்காபுரம் பகுதிக்கு ேமாடடார் சைக்கிளில் தனது மகனுடன் சென்றார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானி:

    பவானி மூன் ரோடு கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி பிரியா (42). இவர்களது மகன் சஞ்சூதீப் (13). பிரியா சின்ன பெரிச்சி பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக சித்தோடு அடுத்த கங்காபுரம் பகுதிக்கு ேமாடடார் சைக்கிளில் தனது மகனுடன் சென்றார்.

    அவர்கள் சித்தோடு செல்லப்பம்பாளையம் பிரிவு ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தாய்-மகன் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சை க்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அதேபோல் பவானி, ஜம்பை, சின்ன வடமலை பாளையம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் ஆறு முகம் (46). டைலர். இவர் தனது நண்பர் பூவேந்திரன் என்பவருடன் மொபட்டில் பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மொபட் மீது எதிர்பாராவிதமாக மோதியது. இதில் ஆறுமுகம் மற்றும் பூவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×