search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ எரிப்பு"

    • மதுரையில் இன்று போகி பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • இந்த நாளில் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை எடுத்து வந்து தெருக்களில் போட்டு தீ வைத்து எரித்தனர்.

    மதுரை

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, போகி, தைப்பொங்கல், மாட்டு பொங்கல் என்று 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முதல் நாளான இன்று போகி பண்டிகை அதிகாலை முதல் உற்சாகமாக அனுசரிக்கப்பட்டது. போகி பண்டிகை என்பது பழையன கழிதலும், புதியன புகுதலும் ஆகும். அதாவது பழையனவற்றை வெளியேற்றும் நாளாக கருதப்படுகிறது.

    இந்த நாளில் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை எடுத்து வந்து தெருக்களில் போட்டு தீ வைத்து எரித்தனர். அதன் பிறகு தீயை சுற்றிலும் நின்று சிறுவர்கள் மேளம் கொட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போகி பண்டிகையின் ஒரு பகுதியாக 'நிலைப் பொங்கல்' அனுசரி க் கப்பட்டது. அப்போது பெரியவர்கள் வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, கூரையில் வேப்பிலை, கூரைப்பூ, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம், தோகையுடன் கூடிய கரும்பு வைத்தும் அழகுபடுத்தினர். இதனைத்தொடர்ந்து தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து நிலைப்பொங்கல் வழிபாடு நடத்தப்பட்டது. அடுத்தபடியாக வடை, பாயாசம், சிறுதானியங்கள், போளி, மொச்சை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை இறைவனுக்கு படைத்து, மதுரை மாவட்டத்தில் நிலை பொங்கல் அனுசரிக்கப்பட்டது.

    ×