search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிதாங்கோடு"

    • அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்பு
    • கர்ப்பிணி பெண்களுக்கான சமையல் போட்டி நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில் திருவி தாங்கோடு துறப்பு எம்.எம். நினைவு மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் சிவப்பிரியா தலைமை யில் கர்ப்பிணி தாய்மார்க ளுக்கான சமுதாய வளை காப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சமுதாய வளை காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதா வது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை உடனுக்கு டன் நிறைவேற்றி வருகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்ற உயரிய நோக்கில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 2500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 50 தொகுதிக்கு ரூ.7.50 லட்சம் மதிப்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்துவதற்கு தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உண்டு என்ற சட்டத்தினை கொண்டு வந்தார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து பெண்கள் ஆண்களுக்கு நிகராக தங்களது வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென்ற உயரிய நோக்கில் அவர்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை ஏற்படுத்தி தந்து தமிழக பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆரோக்கிய குழந்தை களுக்குள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடம் பிடித்த குழந்தையின் தாய்மார்களுக்கு பரிசு களையும், ஆறுதல் பரிசையும் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கி னர். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கான சமையல் போட்டிகளில் முதல் மூன்று இடத்தை பெற்று வெற்றி பெற்ற கர்ப்பிணி பெண்களுக்கு பரிசுகளையும், ஆறுதல் பரிசு ஒரு கர்ப்பிணிக்கும் வழங்கினார்கள்.

    மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சரோஜினி, திருவிதாங்கோடு பேரூராட்சித் தலைவர் ஹாருன்றஷீது (நஸீர்), துணைத்தலைவர் சுல்பத் அமீர், செயல் அலுவலர் வினிதா, கோதநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் அனீஸ், தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×