search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்"

    • வருகிற 1-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனம், 2-ந்தேதி வெள்ளி தேரோட்டம் நடக்கிறது.
    • 3-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை 5 தேர்களில் உற்சவர்கள் வலம் வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 24-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து 25-ந்தேதி பிடாரி அம்மன் உற்சவம், நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.

    இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 6.10 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.

    கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை, இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.

    வருகிற 30-ந்தேதி புதன்கிழமை வெள்ளி கற்பக விருட்சகம், வெள்ளி காமதேனு வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளன.

    வருகிற 1-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனம், 2-ந்தேதி வெள்ளி தேரோட்டம் நடக்கிறது.

    3-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை 5 தேர்களில் உற்சவர்கள் வலம் வருகின்றனர்.

    6-ந்தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.

    இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் போலீஸ் கட்டுப்பாடு இல்லாமல் சாமி தரிசனம் செய்தனர்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீப திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • ராஜகோபுரம் முன்பாக கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கோவிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    சாமி உற்சவ வாகனங்கள் மற்றும் பஞ்சரதங்கள் சீரமைக்கும் பணி நடக்கிறது.

    மேலும் கிரிவலப்பாதையில் தூய்மை பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தார்.

    ராஜகோபுரம் முன்பாக கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து பரணி தீபம், மகாதீபம் ஏற்றப்படும் போது செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அவர் கேட்டறிந்தார்.

    அறநிலை துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கோவில் இணை ஆணையர் அசோக் குமார், தி.மு.க. மருத்துவ அணி துணை தலைவர் கம்பன், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார்
    • 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதன் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதலாக 40 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனை தொடர்ந்து தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அருணாசலேஸ்வரர் கோவில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் சாமி சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் கோவில் வளா கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்தை போலீஸ் டி.ஐ.ஜி. சத்ய பிரியா ஆய்வு செய்து விட்டு வந்தவாசியில் உள்ள சத்புத்திரி நாயகி சமேத ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோலுக்கு வந்தார்.

    அன்னாபிஷேகத்தை முன்னிட்டு டி.ஐ.ஜி. சத்ய பிரியா (பொறுப்பு) சாமி தரிசனம் செய்து கோவிலை சுற்றி வலம் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலை தீபத்திற்கு கடந்த முறை 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை மகா தீபத்திற்கு சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் அம்மன் திருத்தேர்களை சீரமைக்க மூடி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழை தகடுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
    • விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களை சீரமைக்க மூடி வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரங்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடக்கிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் (நவம்பர்)24-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்க உள்ளது.

    27-ந் தேதி தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றப்பட உள்ளது. டிசம்பர் 3-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறும். டிசம்பர் 6-ந்தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    கடந்த 30-ந்தேதி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையடுத்து அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு தேரடி வீதியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மகா தேரோட்டம் நடைபெறாததால் பஞ்ச ரதங்களை முழுமையாக சீரமைத்து அதன் உறுதி தன்மையை இறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் அம்மன் திருத்தேர்களை சீரமைக்க மூடி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழை தகடுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

    இதே போல விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களை சீரமைக்க மூடி வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரங்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடக்கிறது.

    பஞ்ச ரதங்களில் உள்ள சிற்பங்கள் அச்சாணிகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கவும் மற்றும் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடாமல் தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×