search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திநகர் பத்மாவதி தாயார் கோவில்"

    • திருமணம் முடிந்த அன்றே வரும் மணமக்கள் அனைவருக்கும் நேரடி தரிசனம் உண்டு.
    • மூத்தகுடி மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி தரிசனம் உண்டு.

    சென்னை, தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு, சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த கோவிலில், மண்டல பூஜைகள் நடந்து வரும் நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் 5.30 மணி வரை சுப்ரபாத தரிசனம், 6.30 மணிக்கு ஆராதனை நடக்கிறது.

    அப்போது, தரிசனம் கிடையாது. காலை 6.30 மணி முதல் 7 மணிவரை சகஸ்ர அர்ச்சனை தரிசனம் நடக்கிறது. காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 5 மணி வரையும், மாலை 5.45 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் சர்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இடைப்பட்ட நைவேத்திய நேரத்தில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. மூத்தகுடி மக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதிற்கு உள்பட்ட குழந்தை உள்ள தம்பதிகள், திருமணம் முடிந்த அன்றே வரும் மணமக்கள் அனைவருக்கும் நேரடி தரிசனம் உண்டு.

    இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×