search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திசை"

    • வண்டலூர் பூங்கா கொண்டு செல்லப்பட்டது
    • ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள கழுகுகள் சரணாலயத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரிமாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வந்த ஓகி புயலின் போது காற்றின் திசையால் அடித்து வரப்பட்ட சினேரியஸ் இனத்தை சேர்ந்த அரிய வகை கழுகு ஆசாரிபள்ளம் அருகில் விழுந்து கிடந்துள்ளது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் உடலில் காயத்துடன் பறக்க முடியாத நிலையில் இருந்த இரண்டு வயதான கழுகை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து குணமானதும் அதனை தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி பல்லுயிரன பூங்காவில் விசாலமான இரும்பு வலை பின்னிய கூண்டில் விட்டனர். 2 நாள்களுக்கு ஒரு முறை மாமிச இறச்சியும், தண்ணீரும் கொடுத்து 5 வருடமாக பாதுகாத்து வந்தனர்.

    கூட்டமாக வானில் சுதந்திரமாக பறந்து திரியும் கழுகை ஒரே இடத்தில் அடைத்து வைத்திருப்பது அதன் சுதந்திரத்தை பாதிக்கும் என்பதால் அதை கழுகுகள் வாழும் பகுதியில் கொண்டு விட மாவட்ட வனத்துறை முயற்சி மேற்கொண்டு வந்தது.ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூரில் இருக்கும் கழுகுகள் சரணாலயத்தில் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

    பின்பு அதை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் குழுவினர் ஆலோசனை பெற்று அதன் படி திட்டமிடப்பட்டது.சாலை அல்லது ரயில் மூலம் கொண்டு சென்றால் பயண நேரம் அதிகமாகும் இதனால் கழுகின் உயிர் ஆபத்து வந்து விட கூடாது என முடிவு செய்து விமானத்தில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் நாய் பூனை தவிர மற்ற விலங்குகள் கொண்டு செல்ல அனுமதி இல்லாததால் தமிழக வனத்துறை மூலம் மத்திய விமான துறை அமைச்சகம் மூலம் பேசி அனுமதி பெறப்பட்டது.

    இதனையடுத்து கழுகை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக பிரத்தியேக பைபரில் ஆன கூண்டு தயார் செய்து அதில் வைத்து கொண்டு செல்ல நடவடிக்கைகள் நேற்று உதயகிரி கோட்டையில் வைத்து நடைபெற்றது.மாவட்ட வன அலுவலர் இளையராஜா முன்னிலையில் கழுகை கொண்டு செல்ல அது 5 வருடமாக வாழ்ந்து வந்த இடத்தில் உள்ள மண் புளி இலை தரையில் உள்ள புல் ஆகியவற்றை கூண்டுக்குள் வைத்தனர்.பின்னர் கழுகிற்காக அமைக்கபட்ட தண்ணீர் தொட்டி அதனுள் வைக்க பட்டது. கழுகை பராமரித்து வந்த ஊழியர் ராஜா பைபர் கூண்டுக்குள் கொண்டு விட்டார்.

    கோட்டைக்கு வெளியே தயாராக நின்ற ஏசி காரில் பத்திரமாக புறப்பட்டு சென்றது.உதயகிரி கோட்டையில் இருந்து சென்ற கழுகு இன்று மதியம் வண்டலூர் பூங்காவிற்கு சென்று அங்கு 3 நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு நவம்பர் 3-ம் தேதி சென்னை ஏர் இந்தியா விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூரில் உள்ள கழுகுகள் சரணாலயத்தில் ஒப்படைக்க படுகிறது.

    ×