search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்ப்பால் வாரவிழா"

    • விழாவில் தாய்ப்பாலின் நன்மைகள், தாய்ப்பால் கொடுக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து டாக்டர்கள் எடுத்துரைத்தனர்.
    • சிறு வயதில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆரோக்கியமான உணவுகளே அவர்கள் நோய் தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டு ஆரோக்கியமான குழந்தைகளாக வளர உதவுகிறது என்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனையில் திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவி நிஷா தேவி தலைமை தாங்கினார். செயலாளர் கிஷோர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் ஹரி கிருஷ்ணன், உமாதேவி, அன்புச்செல்வன், குழந்தை நல மருத்துவர் டாக்டர் பாலாஜி பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் தாய்ப்பாலின் நன்மைகள், தாய்ப்பால் கொடுக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து டாக்டர்கள் எடுத்துரைத்தனர். மேலும் குழந்தைகள் வளர்ப்பில் தாய்மார்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். சிறு வயதில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆரோக்கியமான உணவுகளே அவர்கள் நோய் தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டு ஆரோக்கியமான குழந்தைகளாக வளர உதவுகிறது என்றனர்.

    தொடர்ந்து நடந்த விழாவில் 50 கொழுகொழு குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசுகளும், புரோட்டின் பவுடர்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேவை திட்ட இணைச்செயலாளர் சண்முகம், மண்டல ஒருங்கிணைப்பாளர் காலிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாய்ப்பாலின் அவசியம் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் தாய்மார்களுக்கு எடுத்துரைத்தார்
    • ஊட்டச்சத்து தானியங்கள் பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதார மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் குமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் டாக்டர் சிவப்பிரியா முன்னிலை வகித்தார். தாய்ப்பாலின் அவசியம் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஷாமிலி தாய்மார்களுக்கு எடுத்துரைத்தார்.

    மேலும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தானியங்கள் பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    தலைமை செவிலியர் தனம் செவிலியர்கள், முபாரக் பேகம், தமிழ்செல்வி, கோகுலவாசன், மீனாட்சி, சீதா, சுதாமதி, உமா, பிரியங்கா மற்றும் 50-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

    ×