அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வாரவிழா

தாய்ப்பாலின் அவசியம் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் தாய்மார்களுக்கு எடுத்துரைத்தார்ஊட்டச்சத்து தானியங்கள் பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன
அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வாரவிழா நடந்த காட்சி.
அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வாரவிழா நடந்த காட்சி.
Published on

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதார மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் குமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் டாக்டர் சிவப்பிரியா முன்னிலை வகித்தார். தாய்ப்பாலின் அவசியம் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஷாமிலி தாய்மார்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தானியங்கள் பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தலைமை செவிலியர் தனம் செவிலியர்கள், முபாரக் பேகம், தமிழ்செல்வி, கோகுலவாசன், மீனாட்சி, சீதா, சுதாமதி, உமா, பிரியங்கா மற்றும் 50-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com