search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாசில்தார் அலுவலகம் முற்றுகை"

    • தனியார் நிலத்தின் வழியாக மயானத்திற்கு செல்ல பாதை அமைத்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • இதனையடுத்து மயானப் பாதை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் முத்தம்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் தனியார் நிலத்தின் வழியாக மயானத்திற்கு செல்ல பாதை அமைத்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 4 நாட்களுக்கு முன் பஸ்சில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

    இதனையடுத்து மயானப் பாதை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. இதுகுறித்து வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி உள்ளிட்டோ இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மயானத்திற்கு உடலை கொண்டு செல்ல பாதை உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும் என கோஷமிட்ட பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து மயானப்பாதை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

    முன்னதாக அவர்கள் சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். வாழப்பாடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×