search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாக்கியவர் கைது"

    • முன்விரோத தகராறில் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த கீழ்நெல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவரது மகள் நந்தீஸ்வரி அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முருகனின் அண்ணன் மகன் விக்னேஷ் கரந்தை கிராம பஸ் நிறுத்தத்தில் தனது நண்பர்களுடன் இருந்தார்.

    அப்போது அங்கு வந்த தமிழ் செல்வன் மற்றும் அவரது சகோதரர் யுவராஜ் ஆகியோர் விக்னேஷிடம் தகராறு செய்துள்ளனர்.

    அப்போது ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வன் அருகில் இருந்த பீர் பாட்டிலால் விக்னேசை தலை மீது தாக்கினார்.

    இதில் விக்னேஷ் படுகாயம் அடைந்தார். பின்னர் தமிழ்செல்வன் விக்னேசிடம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    காயமடைந்த விக்னேஷ் செய்யார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து முருகன் தூசி போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளைஞர்கள் மூன்று பேரும் பெருமாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • வாக்குவாதம் முற்றியத்தில் பெருமாளை கல்லால் தாக்கி உள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மூக்காகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது62). நேற்று இவரது வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தர பாண்டியன், சக்திவேல், விக்னேஷ், ஆகிய மூன்று வாலிபர்கள் நள்ளிரவு செல்போனில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதை பார்த்துக் கொண்டிருந்த பெருமாள் இரவு நேரத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். இதனால் இளைஞர்கள் மூன்று பேரும் பெருமாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியத்தில் பெருமாளை கல்லால் தாக்கி உள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த பெருமாள் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து மத்தூர் போலீசில் பெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சவுந்தரபாண்டி யனை கைது செய்து கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள இரு வரையும் தேடி வருகின்றனர்.

    ×