என் மலர்
நீங்கள் தேடியது "The attacker was arrested"
- முன்விரோத தகராறில் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த கீழ்நெல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவரது மகள் நந்தீஸ்வரி அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முருகனின் அண்ணன் மகன் விக்னேஷ் கரந்தை கிராம பஸ் நிறுத்தத்தில் தனது நண்பர்களுடன் இருந்தார்.
அப்போது அங்கு வந்த தமிழ் செல்வன் மற்றும் அவரது சகோதரர் யுவராஜ் ஆகியோர் விக்னேஷிடம் தகராறு செய்துள்ளனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வன் அருகில் இருந்த பீர் பாட்டிலால் விக்னேசை தலை மீது தாக்கினார்.
இதில் விக்னேஷ் படுகாயம் அடைந்தார். பின்னர் தமிழ்செல்வன் விக்னேசிடம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த விக்னேஷ் செய்யார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து முருகன் தூசி போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






