search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரப்பினர் மோதல்"

    • நிதி நிறுவன அதிபரின் தரப்பை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட நிலத்தில் சுத்தம் செய்வதற்கு சென்றுள்ளனர்.
    • காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரமாக ஆஜராகும் படி போலீசார் அறிவித்துள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆலூத்து பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார்(49) தனது விவசாய நிலத்தை கரூரைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் சுப்பிரமணியம் என்பவரிடம் அடமானம் வைத்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொடுக்கல் - வாங்கல் பிரச்சனையில் இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நிதி நிறுவன அதிபரின் தரப்பை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட நிலத்தில் சுத்தம் செய்வதற்கு சென்றுள்ளனர்.

    இதனை மற்றொரு தரப்பினர் எதிர்த்து கேட்டபோது வாக்குவாதம் முற்றி கைகலப்பாகும் சூழல் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பல்லடம் துணை போலீஸ் சவுமியா, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் இரு தரப்பினரையும் சந்தித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது தகராறில் ஈடுபடக் கூடாது என எச்சரித்தனர்.

    மேலும் இரண்டு தரப்பினரையும் பல்லடம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரமாக ஆஜராகும் படி போலீசார் அறிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கர்ணன் எதிர்பாராத விதமாக மோனிஷ் மீது மோதினார்.
    • வீட்டில் இருந்த கர்ணனின் மனைவி சுசிலாவிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கோவை :

    கோவை காரமடை வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (வயது 55). டிரைவர். இவரது மனைவி சுசிலா (40). இவர்களுது மகன் கவுரி சங்கர் (12). இவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகராஜ் (55). சம்பவத்தன்று இவரது பேரன் மோனிஷ் வீட்டின் அருகே சாலையில் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கர்ணன் எதிர்பாராத விதமாக மோனிஷ் மீது மோதினார்.

    இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மோனிஷ் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் கூறினார். இதனால் கோபம் அடைந்த மோனிஷ் தாத்தா நாகராஜ், அவரது மகன்கள் கார்த்திக் (34), பிரபாகரன் (30), நாகராஜூன் தம்பி கோவிந்தராஜ் (44), அவரது மகன் ஆகியோர் கர்ணன் வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு வீட்டில் இருந்த கர்ணனின் மனைவி சுசிலாவிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் சுசிலாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.மேலும் அவரது 12 வயது மகன் சங்கரை கல்லால் தாக்கினர்.

    வீட்டில் இருந்த கர்ணனின் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்தனர். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர். பலத்த காயம் அடைந்த சங்கர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து சுசிலா காரமடை போலீசில் புகார் அளித்தார். இதேபோன்று நாகராஜ், கர்ணன் மற்றும் சுசிலா தங்களது குடும்பத்தினரை தாக்கியதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இருதரப்பினரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×