search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வெற்றிக் கழகம்"

    • விஜய் கட்சி தொடங்கி அவரது கட்சியில் இதுவரை 76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக இணைந்துள்ளனர்.
    • சில நாட்களுக்கு முன்பு விஜய் பெயரில் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என செய்திகள் வெளியானது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

    கட்சி தொடங்கியதை அறிக்கை வாயிலாக வெளியிட்ட விஜய் கொள்கைகளாக தமிழ் நாட்டு மக்களுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பம் என்று குறிப்பிட்டார்.

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்திற்கு வழி வகுப்பதுதான் நமது இலக்கு என்றும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும் தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல் திட்டங்களை முன் வைத்து மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

    விஜய் அரசியல் அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கிடையே பரபரப்பையும் ரூ.200 கோடிக்கு மேல் சினிமாவில் சம்பளம் வாங்கும் விஜய் அதை விட்டுவிட்டு மக்கள் பணிக்காக வருகிறாரே என பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாரதிய ஜனதா, தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இது ஒருபுறமிருக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு காட்டுத் தீயாக பற்றிக் கொண்டுள்ளது.

    விஜய் கட்சி தொடங்கி அவரது கட்சியில் இதுவரை 76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக இணைந்துள்ளனர். இத்தனை லட்சம் வாக்குகள் எந்த கட்சிக்கு செல்லும் என்பது அரசியல் கட்சிகள் மத்தியில் புரியாத புதிராக உள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு விஜய் பெயரில் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என செய்திகள் வெளியானது. இதையடுத்து அந்த அறிக்கை போலியானது என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேதி நெருங்கும் நிலையில் விஜய் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்பது பரபரப்பாக உள்ளது. இதுபற்றி அவரது தரப்பில் விசாரித்த போது பாராளுமன்ற தேர்தல் ஆதரவு பற்றி விஜய் ஏற்கனவே கட்சி தொடங்கிய போதே அறிவித்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என அறிக்கையில் தெளிவாக கூறி உள்ளார்.

    விஜய் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இருக்கிறார். தேர்தலுக்கு 2 தினங்களுக்கு முன்பு வாக்களிப்பதற்காக சென்னை வருகிறார் என கூறினர்.

    • பெரும்பாலும் இரவிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    • படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் செல்லும் நடிகர் விஜய், அங்கு ரசிகர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவனந்தபுரம், மார்ச்.13-

    நடிகர் விஜய் தி கோட்(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு இது 68-வது படம் ஆகும்.

    தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெட்கட்புரபு முதன்முறையாக இணைந் துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் ஷக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    தி கோட் படத்தின் படப் பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கப்பட்டது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.கிளைமேக்ஸ் காட்சிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுககப்பட உள்ளது.

    கிளைமேக்ஸ் காட்சிகள் முதலில் இலங்கையில் எடுக்க படக்குழுவினர் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த காட்சிகள் திருவனந்த புரத்தில் எடுக்கப்படுகிறது. அதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் வருகிற 18-ந்தேதி கேரளா வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் காரியவட்டத்தில் உள்ள கிரீன்பீல்டு மைதா னம், சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. பெரும்பாலும் இரவிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அவரது வருகை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

    சினிமா படப்பிடிப் பிற்காக நடிகர் விஜய் முதன் முறையாக திருவனந்த புரத்துக்கு வர உள்ளார். படப்பிடிப்புக்காக திருவ னந்தபுரம் வரும் நடிகர் விஜய், அங்கு ரசிகர்களை யும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றது.
    • 3 நாடுகளில் இருந்து வந்த மேற்கண்ட மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கும்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருச்சச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.

    தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்து, கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.

    இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இம்மசோதா வகை செய்கிறது.

    2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றது.

    ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 6 மாதங்களுக்குள் சட்டத்துக்கான விதிமுறைகளை வெளியிட்டால்தான், அச்சட்டம் அமலுக்கு வரும். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சில மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    எனவே, விதிமுறைகள் வெளியிடப்படவில்லை. சட்டமும் அமல்படுத்தப்படவில்லை.

    இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். அதையடுத்து இதற்கான பணிகள் வேகம் எடுத்தன.

    இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்துடன் அச்சட்டம் அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

    3 நாடுகளில் இருந்து வந்த மேற்கண்ட மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கும். இதற்கென பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    எவ்வித ஆவணமும் இல்லாமல், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு வந்தவர்கள் அதில் விண்ணப்பிக்க வேண்டும். எந்த ஆண்டு வந்தனர் என்பதை குறிப்பிட வேண்டும். அவர்களிடம் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
    • சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.

    மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் - அவரது எதிர்கால ஆசைகள் - கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனையை உடனே வழங்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    யாராலும் தேற்ற முடியாத சோகத்தில் தவிக்கும் அச்சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு.
    • சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

    புதுச்சேரியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

    புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.

    பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

    சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார் புஸ்சி ஆனந்த்.
    • விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    விஜய் ரசிகர் மன்றத்தில் 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் புஸ்சி ஆனந்த். இவர் புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

    விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய பொதுச்செயலாளராக விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்கள் இயக்க பணிகளை தீவிரப்படுத்தினார். மக்கள் இயக்கத்தின் மூலம் நடைபெற்ற அன்னதானம், பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார்.

    தற்போது 'தமிழக வெற்றிக் கழகம்' என விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதையொட்டி புதுச்சேரியில் தனது வாக்காளர் அட்டை முகவரியை வைத்திருந்த புஸ்சி ஆனந்த் கட்சி பணிகளுக்காக தற்போது தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் முகவரிக்கு மாற்றியுள்ளார்.

    • நானும் அவருடன் பல சமயங்களில் சண்டையிட்டு இருக்கிறேன்.
    • அவரை நான் உண்மையிலேயே மனதார வாழ்த்துகிறேன்.

    நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கினார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர், சினிமா உலக பிரமுகர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துகள், விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு இடையில் பிரச்சினைகள் இருந்தன. நானும் அவருடன் பல சமயங்களில் சண்டையிட்டு இருக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் அவரது அரசியல் பிரவேசம் என்னை மிகவும் கவர்ந்தது. எல்லோரும் தாங்கள் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது இதைச் செய்யமாட்டார்கள். நான் அவரைப் பாராட்டுகிறேன்.

    அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை நான் உண்மையிலேயே மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அருண்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சி குறித்த அறிவிப்பை கடந்த 2-ம் தேதி அறிவித்தார்.
    • தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்றார்.

    சென்னை:

    நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே, கட்சி பெயரில், 'க்' விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டிய நிலையில், கட்சியின் பெயரில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×