search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால்காரர்"

    • மதுரை அருகே தபால்காரர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறையை சேர்ந்தவர் தேவராஜன் (வயது57). இவர் பழைய குயவர்பாளையம் ரோட்டில் உள்ள தபால் அலுவலகத்தில் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. சம்பவத்தன்று பணியில் இருந்த தேவராஜன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சக ஊழியர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் ரெயில்வே பார்சல்களை தபால்காரர் மூலம் டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் இன்று (19-ந்தேதி) மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நடந்தது.

    மதுரை

    பயணிகள் ரெயில்களில் சரக்கு போக்குவரத்துக்கு என தனி சரக்கு பெட்டி இணைக்கப்பட்டு பார்சல் சேவை நடைபெற்று வருகிறது. அதேபோல தபால்கள் பயணிகள் ரெயில்களில் தனி பெட்டிகளில் அல்லது சரக்கு பெட்டிகளில் ரெயில் மெயில் சர்வீஸ் மூலம் அனுப்பப்படுகிறது.

    வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக ரெயில்வேயும், தபால் துறையும் இணைந்து ரெயில் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறது. சூரத்-வாரணாசி இடையே தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த சேவை நடைபெற்று வருகிறது.

    இந்த சேவையில் தபால் துறை வாடிக்கையாளர்களிடம் இருந்து சரக்குகளை பெற்று ரெயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யும். பின்பு பார்சல் சேரும் ரெயில் நிலையத்திலும் ரெயிலில் வந்த பார்சலை பெற்று வாடிக்கையாளரிடம் தபால் துறையே ஒப்படைக்கும் வசதியும் உள்ளது.

    இதன் மூலம் உற்பத்தி பொருட்கள் உற்பத்தியாகும் இடத்தில் இருந்து நேரடியாக வாடிக்கை யாளரின் வாசலுக்கே சென்று சேரும் வாய்ப்பு உள்ளது. வாடிக்கையாளருக்கு வசதியாக இருக்கும் இந்த திட்டத்தை மற்ற பகுதிகளிலும் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை விளக்கும் வகையில் ரெயில்வே துறை, தபால் துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் இன்று (19-ந்தேதி) மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நடந்தது. இதில் ரெயில்வே வாரிய திட்ட இயக்குநர் ஜி.வி.எல்.சத்யகுமார், மதுரை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜெய்சங்கர், தபால் துறை இயக்குநர் சரவணன், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ஆர்.பி.ரதிப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு திட்ட விளக்க உரையாற்றினர்.

    இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் வர்த்தகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×