search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் லாரிகள்"

    • லாரிகளை காத்திருக்க வைப்பதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
    • தண்ணீர் லாரி ஸ்டிரைக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநகராட்சியின் குடிநீர் வினியோகிக்கும் நிலையம் உள்ளது. இங்கிருந்து நாள் ஒன்றுக்கு 55 லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு பல்வேறு இடங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதில் லாரிகளுக்கு போதிய அளவு முறையாக தண்ணீர் வழங்காமல் நீண்ட வரிசையில் காத்திருக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இந்த நிலையில் லாரிகளை காத்திருக்க வைப்பதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். மொத்தம் 42 லாரிகள் வேலைநிறுத்ததில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் கோடம்பாக்கம், தி.நகர், ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வாரமாக குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் இல்லை என்று தெரிகிறது. தற்போது தண்ணீர் லாரி ஸ்டிரைக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    ×