search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை"

    • பழனியில் உள்ள பாலாறு பொருந்த லாறு, வரதமாநதி, குதிரை யாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • பூஞ்சோலை கிராமத்துக்கு செல்லும் தரைப்பாலம் கன மழை காரணமாக அடித்து செல்லப்பட்டது.

    பழனி:

    கொடைக்கானல் மற்றும் பழனியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகள் வேகமாக நிரம்பியது. பழனியில் உள்ள பாலாறு பொருந்த லாறு, வரதமாநதி, குதிரை யாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    மேலும் இந்த 3 அணை களில் இருந்து தற்போது கூடுதல் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம் திண்டுக்கல், திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    பாலாறு பொருந்தலாறு அணை முழு கொள்ளளவை எட்டியதாலும் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் 1200 கன அடி நீர் வெளியேற்ற ப்படுகிறது. இந்த நீர் சண்முகநதியில் திறந்து விடப்படும். எனவே சண்முகநதி, பாலாறு பொருந்தலாறு கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

    பழனி அருகே உள்ள பூஞ்ேசாலை கிராமத்துக்கு செல்ல ஒரு தரைப்பாலம் உள்ளது. இப்பகுதியில் பெய்த கன மழை காரண மாக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

    இதனால் பாலத்தின் வழியே பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அணையின் மீது ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல முடியாமலும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உடைந்த தரைப்பாலத்தை சீரமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×