search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டவாளம் புதுப்பிக்கும் பணி"

    • தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல பொதுமக்கள் பஸ் மூலம் திண்டுக்கல் வந்து செல்கின்றனர்.
    • பழைய தண்டவாளத்தை மாற்றி ஒரு அடி தூரத்திற்கு 52 கிலோ எடை இருக்கும் படியான புதிய தண்டவாளம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ரெயில்நிலையம் வழியாக தினசரி 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல பொதுமக்கள் பஸ் மூலம் திண்டுக்கல் வந்து செல்கின்றனர்.

    மேலும் வடமாநிலங்களை தென்மாவட்டங்களுடன் இணைக்கு முக்கிய சந்திப்பாக திண்டுக்கல் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி சரக்கு ரெயில் தண்டவாளங்களை மாற்றிவிட்டு புதிய தண்டவாளம் மாற்றும் பணியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்டவாள உதவி பொறியாளர் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி கூறுகையில், ஏற்கனவே இருந்த பழைய தண்டவாளத்தை மாற்றி ஒரு அடி தூரத்திற்கு 52 கிலோ எடை இருக்கும் படியான புதிய தண்டவாளம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் அதிக வலுவுள்ள ரெயில்கள் மற்றும் கூடுதல் ரெயில்கள் அதிகளவில் இயக்க முடியும்.

    நாளுக்குநாள் ரெயில்போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    ×