search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கமயில்"

    • புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி நாளை திறக்கப்பட உள்ளது.
    • ‘தங்கமாங்கல்யம்’ பெயரில் திருமண நகைகள் அறிமுகம் செய்யப்படும்.

    மதுரை

    மதுரை நேதாஜி ரோட்டில் புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தங்க மாங்கல்யம் என்ற பெயரில் திருமண நகை கலெக்‌ஷன்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    மதுரையில் தங்க நகை வணிகத்தில், மக்களின் பேரன்பு பெற்று தங்கமயில் ஜூவல்லரி ஜொலித்து வருகிறது.

    தங்கமயில் ஜூவல்லரி கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனியொரு அடையாளத்தை பதித்து உள்ளது. இன்று 25 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழகம் முழுவதும் கிளைகளை பரப்பி இந்த மண்ணின் மனம் கவர்ந்த ஒரு ஜூவல்லரியாக உயர்ந்து நிற்கிறது.

    இந்த நிலையில் மதுரை நேதாஜி ரோட்டில் புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. விழாவின் முக்கிய அம்சமாக மிகப்பெரிய பிரைடல் ஸ்டோர் தொடங்கப்படுகிறது.

    மேலும் தமிழகத்தில் முதன்முறையாக தங்க மாங்கல்யம் என்னும் தனித்துவமான பிரைடல் கலெக்ஷன்களை அறிமுகப்படுத்துகிறது.

    இதில் மணமகளுக்கு ஏற்ற தங்க, வைர ஆபரணங்கள், ரத்தின கற்களில் அமைந்த நகைகள், வெள்ளி நகைகள் என வித, விதமான திருமண நகை கலெக்‌ஷன்கள், டிசைன்கள், பிரைடல் செட் என்று தங்கமயில் ஜூவல்லரி தனித்துவமான மற்றும் மிக பிரமாண்டமான தங்க மாங்கல்யம் கலெக்‌ஷன்களை வடிவமைத்து இருப்பது கவனிக்கத்தக்க ஒன்று.

    இதுகுறித்து தங்கமயில் ஜூவல்லரி நிர்வாகிகள் கூறும்போது, மதுரை தான் எங்களின் ஆரம்பம். மதுரை மக்கள் எப்போதும் எங்களுக்கு மிக நெருக்கமானவர்கள். 30 ஆண்டு கால பயணத்தில் அவர்கள் தந்த பேராதரவினால் தான் இன்று தமிழகத்தின் முன்னணி ஜூவல்லரியாக உயர்ந்து நிற்கிறோம்.

    இன்று பங்கு சந்தையிலும் தடம்பதித்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று இருக்கிறோம். நாளை நடைபெறும் தொடக்க விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறோம் என்றனர்.

    ×