search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகாத வார்த்தை"

    • ஆசிரியர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசியதை பள்ளி தலைமை ஆசிரியை கண்டித்தார்.
    • அவரை மிரட்டயதுடன் அங்கிருந்த ஆசிரியைகளிடம் கத்தியை காட்டி மிரட்டியதைக்கண்ட பொதுமக்கள் பள்ளிக்குள் சென்று செல்வக்குமாரை பிடிக்க முயற்சித்தனர்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள கள்ளப்பெரம்பூர் - தஞ்சை சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளியின் முன்புறம் உள்ள திடலில் வழிபாடு நடைபெற்றது. இதில் மாணவ - மாணவிகள் திடலில் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பள்ளி வளாகத்துக்குள் வந்த கள்ளப்பெரம்பூர் புதுக்காலனியை சேர்ந்த செல்வக்குமார் (வயது38) என்பவர் ஆசிரியர்கள் நின்று கொண்டிருந்த மேடை மீது ஏறினார். பின்னர் அவர் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் பேசினாா். அவரிடம் பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா கரோலின் பேசினார். இதை பொருட்படுத்தாத செல்வகுமார் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளை பேசிக் கொண்டே இருந்தார்.

    இதை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சண்முகம் தட்டி கேட்ட போது, அவரை செல்வகுமார் முகத்தில் தாக்கினார். மேலும் பள்ளியின்மற்றொரு ஆசிரியரான மருதுபூபதி என்பவரையும் செல்வகுமார் தாக்கினார்.இதனால் அங்கிருந்த மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே பள்ளி தலைமை ஆசிரியை ஷீலாகரோலின் மற்றொரு பெண் ஆசிரியை, ஆசிரியர் ஜோசப் சகாயராஜ் ஆகியோர் செல்வக்குமாரை சுற்றி நின்று தட்டி கேட்டுள்ளனர்.

    அப்போது செல்வகுமார் பள்ளி தலைமையாசிரியை ஷீலா கரோலினாவை தகாத வார்த்தைகளால் பேசி அவரை மிரட்டயதுடன் அங்கிருந்த ஆசிரியைகளிடம் கத்தியை காட்டி மிரட்டினார். இதைக்கண்ட சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் பள்ளிக்குள் சென்று செல்வக்குமாரை பிடிக்க முயற்சித்தனர்.

    ஆனால் செல்வக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பள்ளியின் தலைமைஆசிரியை ஷீலா கரோலின் மாவட்ட பள்ளி க்கல்வி உயர் அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.தாக்குதலில் காயமடைந்த உடற்கல்வி ஆசிரியர் தஞ்சையை சேர்ந்த சண்மு கத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

    ×