search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோக்லாம்"

    டெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் சீனா பாதுகாப்பு மந்திரிகள் இடையிலான சந்திப்பில் டோக்லாம் நிகழ்வை முன்னுதாரனமாக வைத்து எதிர்கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது. #NirmalaSitharaman #PLA
    புதுடெல்லி :

    சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் வேய் ஃபெங்ஹே ராணுவ அதிகாரிகள் உள்பட 24 உயர் அதிகாரிகள் சகிதம் நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக கடந்த 21-ம் தேதி இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடியை, அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசியபோது, இந்தியா மற்றும் சீனா இடையே அனைத்து துறைகளிலும் உயர் மட்ட தொடர்புகள் அதிகரித்துள்ளது தொடர்பாக மோடி பாராட்டு தெரிவித்தார்.

    இந்நிலையில், வேய் ஃபெங்ஹே பாதுகப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், டோக்லாம் விவகாரம் மற்றும் இதர எல்லைப் பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இதில், டோக்லாம் பிரச்சனையின் போது இருநாட்டு ராணுவமும் எல்லையில் 73 நாட்கள் மோதல்போக்குடன் நிலைகொண்டிருந்தாலும், இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் பிரச்சனையை முதிர்ச்சியுடனும், கட்டுப்பாட்டுடனும் எதிர்க்கொண்டது குறித்த நேர்மறையான கருத்துக்களை நிர்மலா சீதாராமனும், வேய் ஃபெங்ஹேவும் பகிர்ந்துகொண்டனர்.

    எதிர்காலத்தில் எழும் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண டோக்லாம் நிகழ்வு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் எனவும் இருவரும் தெரிவித்தனர்.

    வடகிழக்கு மாநில எல்லைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் சீனாவின் இறையான்மைக்கு எதிராக விளங்குவதாக பேச்சுவார்த்தையில் சீன தரப்பு தெரிவித்தது.

    இதற்கு விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன், எல்லைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தேவையான குடிநீர் இணைப்பு, நீர்பாசன விரிவாக்கம், தொலைத்தொடர்ப்பு மற்றும் சாலை அமைத்தல் போன்றவைகளை சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது. இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டங்கள் எந்த நாட்டிற்கும் எதிராக அமையாது என தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த வேய் ஃபெங்ஹே, இந்த விவகாரங்களை எல்லையில் உள்ள இந்தோ - சீனோ கூட்டுப்படைகள் மட்டத்தில் பேசி அவர்கள் முடிவு செய்துகொள்வார்கள் என கூறினார்.

    மேலும், காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியின் வழியாக சீனாவின் பட்டுப்பாதை திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து இந்தியாவின் அதிருப்தியையும் நிர்மலா சீதாராமன் பதிவு செய்தார்.



    மேலும், இந்தியா-சீனா கூட்டு ராணுவ பயிற்சியை விரிவுபடுத்தவும், இருநாடுகள் இடையே கடந்த 2006-ம் ஆண்டு கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்ததைப் போல் ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்கவும் இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது.

    இரண்டு நாடுகளின் ராணுவமும் நேரடியாக தொடர்பு கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஹாட்லைன் எனும் தொலைபேசி சேவையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா - சீனா ராணுவ தளபதிகள் மற்றும் ராணுவ தலைமை இடையே நேரடி தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட உள்ளது. #NirmalaSitharaman #PLA
    டோக்லாம் பகுதியில் சீனா மீண்டும் கட்டுமான பணியை தொடங்கியுள்ளதாக அமெரிக்கா கூறிய தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. #Doklam
    புதுடெல்லி :

    இந்தியா, பூடான், சீனா நாடுகளின் முச்சந்திப்பான டோக்லாமில் சீன ராணுவம் அடாவடியாக கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டது. இதை, இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் மோதல் போக்கு நிலவியது. 

    டோக்லாமில் சீனாவும், இந்தியாவும் 73 நாட்கள் படைகளை எதிரெதிரே நிறுத்திய விவகாரம் கடந்த ஆகஸ்ட் மாதம் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. 

    இந்நிலையில், டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணிகளை மீண்டும் தொடர்ந்திருக்கிறது. அதை பூட்டான் மற்றும் இந்தியா தடுக்க முயற்சி செய்யவில்லை என அமெரிக்காவுக்கான தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை உதவி செயலாளர் அலைஸ் ஜி வெல்ஸ் கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


    இந்நிலையில், டோக்லாம் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் விகே சிங் மாநிலங்களவையில் பேசுகையில், டோக்லாமில் மோதல் போக்கு நடைபெற்ற இடத்தில் சீனா எந்தஒரு கட்டமைப்பு பணியையும் மேற்கொள்ளவில்லை, அங்கு இரு நாடுகள் தரப்பிலும் எல்லை நிலைபாடு சரியாக பின்பற்றப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

    இருதரப்பு உறவு மேம்பட எல்லையில் அமைதி என்பது முக்கியமானது என்பதை சீனாவிடம் உயர்மட்ட அளவில் இந்தியா பேசியுள்ளது எனவும் விகே சிங் குறிப்பிட்டார். #Doklam 
    ×