search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேபிள்"

    • ஞானபிரகாசம் குடும்பத்துக்கு நஷ்டஈடாக யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.11 லட்சத்து 14 ஆயிரம் வழங்க உத்தரவிடடார்.
    • அந்நிறுவனம் நஷ்டஈடு வழங்க இழுத்தடித்ததால் அவர்கள் தஞ்சை சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (வயது 42) விவசாயி. இவரது மனைவி ஜெயக்கொடி (40). இவர்களுக்கு கரண், சுதன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஞானபிரகாசம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மன்னார்குடி அடுத்த கம்மங்குடி ஆர்ச் பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ஞானபிரகாசம் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    மேலும் விபத்தில் பலியான ஞானபிரகாசம் மனைவி ஜெயக்கொடி, அவரது மகன்கள் மற்றும் ஞானபிரகாசத்தின் தாயார் ஆகியோர் நஷ்டஈடு கேட்டு மன்னார்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2019-ம் ஆண்டு ஞானபிரகாசம் குடும்பத்துக்கு நஷ்டஈடாக யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.11 லட்சத்து 14 ஆயிரம் வழங்க உத்தரவிடடார்.

    ஆனால் அந்நிறுவனம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வட்டியுடன் சேர்த்து ரூ.17 லட்சத்து 74 ஆயிரத்து 371 வழங்க உத்தரவிட்டது.

    இருந்தாலும் அந்நிறுவனம் நஷ்டஈடு வழங்க இழுத்தடித்ததால் அவர்கள் தஞ்சை சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கடந்த ஜூன் 24-ந் தேதி பிறப்பித்த உத்தரவில்யு னெடெட் இன்சூரன்ஸ் அலுவலகத்தின் பொருட்களை ஜப்தி செய்யுமாறு கூறினார். அதன்படி இன்று நீதிமன்ற ஊழியர்கள் இன்சூரன்ஸ் நிறுவன முதுநிலை கோட்ட மேலாளர் ஸ்டாலினிடம், ஜப்தி செய்வதற்கான ஆணையை வழங்கினர். இதையடுத்து அங்கிருந்த கம்யூட்டர், டேபிள், ஏசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஜப்தி செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×