search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜே.சி.பி. பறிமுதல்"

    • ஜே.சி.பி. மூலம் செம்மண் எடுப்பது தெரியவந்தது.
    • போலீசாரை கண்டதும் ஜே.சி.பி. டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரளாவுக்கு குமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் அனுமதியின்றியும் அளவுக்கு அதிகமாகவும் கடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வருவாய்துறை யினரும் போலீசாரும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர மண் எடுக்க பயன்படுத்தும் ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் திருவட்டார் பகுதியில் இருந்து அனுமதியின்றி செம்மண் எடுத்துச் செல்வதாக புகார் வந்தது. குமரன்குடி பகுதியில் இருந்து இந்த மண்ணை கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து அவர், திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    பின்னர் போலீசாருடன் இணைந்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தச் சென்றார். அப்போது அங்கு ஜே.சி.பி. மூலம் செம்மண் எடுப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் ஜே.சி.பி. டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதனை தொடர்ந்து போலீசார் ஜே.சி.பி.யை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அதன் உரிமையாளர் யார்? செம்மண் தோண்டியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடமதுரை அருகே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • மணல் திருட்டில் ஈடுபட்ட 3 லாரிகள் மற்றும் ஒரு ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்யப்பட்டது

    வடமதுரை:

    வடமதுரை, அய்யலூர், குஜிலியம்பாறை, பாளையம், எரியோடு, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    கிராமங்களில் உள்ள தென்னந்ேதாப்புகளில் மணல் பதுக்கி வெளி மாவட்டங்களுக்கு கடத்த–ப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இது குறித்து தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் வந்தநிலையில் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மண்டல புவியியல் அதிகாரி மாரியம்மாளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முத்தண்ணாங் கோட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 3 லாரிகள் மற்றும் ஒரு ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இது குறித்து கம்பிளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் மற்றும் கார்த்திக், நந்தவனப்பட்டி பகுதியை சேர்ந்த மயி–ல்வாகனம், காமலாம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ், ரெட்டியார்சத்திரம் வெங்கடேஷ் , சுப்பிரமணி, தமிழ்அன்பு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வடமதுரை இன்ஸ்பெக்டர் நாகசாந்தி ஆலோசனையின்படி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×