search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை"

    • இந்திய அணி தரப்பில் ஸ்வேதா செஹராவத் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • இன்று மாலை ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிக்கு 2-வது அரையிறுதி போட்டி நடக்க இருக்கிறது.

    19 வயது உட்பட்டவருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று அரை இறுதி போட்டி நடைபெற்றது. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


    106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனையாக ஷஃபாலி வர்மா - ஸ்வேதா செஹராவத் களமிறங்கினர். ஷஃபாலி வர்மா 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சவுமியா திவாரி ஸ்வேதா செஹராவத்துடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர்.

    அதிரடியாக விளையாடிய ஸ்வேதா செஹராவத் 39 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த உலக கோப்பையில் இது இவருக்கு 3-வது அரை சதம் ஆகும். இந்திய அணி 95 ரன்கள் இருந்த போது சவுமியா திவாரி போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். 

    இறுதியில் இந்திய அணி 14.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இன்று மாலை ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிக்கு 2-வது அரையிறுதி போட்டி நடக்க இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் மோதும்.

    • இந்திய அணி தரப்பில் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜியா 35 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    19 வயது உட்பட்டவருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அரை இறுதி போட்டி நடைபெறுகிறது. இன்றைய அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதனையடுத்து ஜார்ஜியா ப்ளிம்மர் - இசபெல்லா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.


    இசபெல்லா 26 ரன்னில் பார்ஷவி சோப்ரா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் இஸி ஷார்ப் 13 ரன்னிலும் நிதானமாக விளையாடி வந்த ஜார்ஜியா 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    ×