search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாலி"

    • நகை கடைக்காரரை பிடிக்க போலீஸ் தீவிரம்
    • கைது செய்யப்பட்ட இருவரும் இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் வண்ணாத்தி விளை நரிக்கல் சாலையை சேர்ந்தவர் சத்தியநேசன்.இவரது மனைவி றோஸ்லி (வயது 70).

    இவர் தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் 23-ந்தேதி மதியம் ஒரு பைக்கில் 2 வாலிபர்கள் இவரது கடைக்கு வந்தனர்.அவர்கள் றோஸ்லிடம் சிகரெட் கேட்டனர்.உடனே றோஸ்லி கடைக்குள் திரும்பி சிகரெட் எடுத்தார். உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் வாலிபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

    மூதாட்டி உடனே சப்த மிட்டு சங்கிலியை பிடித்து போராடினார். இதனால் அவரை வாயை பொத்தி தாக்கிய வாலிபர்கள் சங்கிலியை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.இது குறித்து றோஸ்லி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் அப்பகுதி கேமிராக்களை ஆய்வு செய்து சங்கிலி பறித்து சென்ற ஆசாமிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரும்பிலி சந்திப்பில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தீவிர ரோந்து சென்றார்.அப்போது அங்கு சந்தேகத் திற்கிடமாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.போலீசார் அவர்களை நெருங்கி சென்றதும் வாலி பர்கள் தப்பியோட முயன்ற னர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 வாலிபர்களும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பேட்டை புன்னபுரத்தை சேர்ந்த வைஷாக் (32), சுனித் (32) என்பதும், அவர்கள்தான் மூதாட்டி றோஸ்லியிடம் நகை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

    மேலும் வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இரணியல், கொல் லங்கோடு, மணவாளக் குறிச்சி, கருங்கல், ராஜாக்க மங்கலம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 25 பவுன் நகைகளை மீட்ட னர். அவர்கள் பயன்படுத்திய 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருடிய நகைகளை விற்று ஜாலியாக செலவு செய்ததாகவும் கூறினார்கள். இதற்கிடை யில் கைது செய்யப்பட்ட இருவரையும் இரணி யல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

    குமரியில் செயின் பறிப் பில் ஈடுப்பட்டு கைது செய்யப் பட்ட கேரள வாலிபர் கள் மேற்கூறிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 35 பவுன் நகைகள் பறித்துள்ளனர்.இவற்றுள் 25 பவுன்தான் மீட்கப்பட்டுள்ளது.மீதி 10 பவுன் மீட்கப்படவில்லை.இந்த வாலிபர்கள் குமரியில் பறிக்கும் நகைகளை திருவனந்தபுரம் சாலையில் ஒரு நகை கடையில் விற்பது வழக்கம்.

    இந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் மேற்கூறிய நகை கடைக்காரர் கடையை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    ×