search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளிகளை"

    பள்ளிப்பாளையம் ஜவுளிக்கடையில் பெண் ஊழியரை திசைதிருப்பி ஜவுளிகளை திருடிய பெண்களை சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆர்.எஸ். பிரிவு ரோடு சாலையில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடை உள்ளது . சம்பவத்தன்று மதிய நேரத்தில் செந்தில்குமார் உணவு அருந்துவதற்கு வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் ஜவுளிக்கடை பெண் ஊழியர் மட்டுமே கடையில் இருந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த சுமார் 50 வயதிற்கு மேற்பட்ட 3 பெண்கள் மற்றும் ஒரு வயதான முதியவர் என 4 பேர் கொண்ட குழுவினர் ஜவுளி துணி எடுப்பது போல பாவனை செய்து ஜவுளிக் கடை பெண் ஊழியரை சூழ்ந்து கொண்டனர்.

    அப்போது அந்த கூட்டத்தில் ஒரு பெண் புடவையை விரித்து காட்டுவது போல போக்கு காட்டி இது என்ன விலை என்று கேட்டுக்கொண்டு அந்த பெண் ஊழியரை திசை திருப்பி அவர்களில் ஒரு பெண் ஒருவர் தான் ஏற்கனவே எடுத்து செல்ல வைத்திருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட காட்டன் புடவைகளை கால் இடுக்கில் மறைத்து வைத்துக் கொண்டார்.

    பின்பு 150 ரூபாய்க்கு 2-துண்டுகளை மட்டுமே வாங்கிக் கொண்டு அந்த கும்பல் வெளியேறியது. சிறிது நேரத்துக்குப்பிறகு ஜவுளிக்கடை பெண் ஊழியர் கடை ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்ட புடவைகள் எண்ணிக்கை குறைகிறதே என அதிர்ச்சி அடைந்து சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தார். அப்போது அதில் தன்னை திசை திருப்பிவிட்டு வந்திருந்தவர்கள் லாவகமாக காட்டன் புடவைகளை திருடி சென்றதை கண்டறிந்தார்.

    திருடுபோன ஜவுளிகள் மதிப்பு மொத்த மதிப்பு ரூ.14 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிப்பாளையம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது சி.சி.டி.வி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ×